சாஸ்திரமாகிய கீதையை, விண்டு அறைந்த - வெளியிட்டுக் கூறியருளிய, அன்பு உடையார் - அன்பையுடையவருமாகிய திருமாலினது, வெற்பு - திருமலை; (எ - று.) மெல்லியர் - மென்மையான தன்மையையுடையவர். மகளிரது சிவந்த கை - செங்காந்தளுக்கும், திரண்டுஉருண்ட கழற்சிக்காய் - வண்டுக்கும், மகளிர் கைகளிற்கொண்டு ஆடும்போது அக்காய்கள் அக்கைகளின்மேல் எழுந்தெழுந்து ஆடி மீண்டும் அவற்றில்விழுதல் - காந்தள்மலரின்மேல் வண்டு விழுந்து எழுந்தெழுந்து மொய்த்தற்கும் உவமை; வடிவுந் தொழிலும் பற்றியது. ஆம் - உவமவுருபு. மெல்லியர், இ - சாரியை. மல்லினர் - மல்லர்: இன் - சாரியை. மற்போராவது - படைக்கலமின்றி உடல்வலிமைகொண்டு பலவகையாகச் செய்யும் போர். "பண்டு" என்றது, கிருஷ்ணாவதாரத்தை. பார்த்தனுக்குத் தத்துவநூல் ஓதியது: - மகாபாரதயுத்தத்தில் முதல் நாட்போர்த்தொடக்கத்தில் எதிர்வந்துநின்ற வீரர்களெல்லாம் பாட்டனும் அண்ணன் தம்பிமாரும் மாமனும் உறவினரும் கல்வி பயிற்றிய ஆசாரியரும் மனங்கலந்த நண்பரு மாகவே யிருக்கக் கண்டு "உற்றாரையெல்லாம் உடன்கொன்று அரசாளப், பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்" என்றுஎண்ணிப் போர்புரியேனென்று காண்டீவம் கைந்நெகிழத் தேர்த்தட்டின் மீதே திகைத்துநின்ற அருச்சுனனுக்குக் கண்ணன் தத்துவோபதேசஞ் செய்து தனதுவிசுவரூபத்தைக்காட்டி அவனது மயக்கத்தை ஓட்டி அவனைப் போர்புரியுமாறு உடன்படுத்தினன் என்பதாம். அப்பொழுது உபதேசித்த தத்துவப்பொருளே, ஸ்ரீபகவத்கீதையென வழங்கப்படுகின்ற நூலாம். தத்வம் - வடசொல்; உண்மைப்பொருள். தத்துவநூல் - ஜீவாத்மா பரமாத்மா இவர்கட்குஉள்ள சம்பந்தம், கர்மம், பிறப்பு, முத்தி முதலியவற்றின் உண்மையான தன்மையை உரைத்த சாஸ்திரம். பார்த்தன் - அருச்சுனன்; பிருதையின் மகன்: பிருதை - குந்தி. விண்டு, விள் - பகுதி. உடையார் என்ற சொல் இரண்டனுள், முந்தி னது - உடையென்னும் வினைப்பகுதியின்மேற் பிறந்த எதிர்மறைத்தெரி நிலைவினையாலணையும்பெயரும், பிந்தினது - உடைமை யென்னும் பண்பி னடியாப் பிறந்த உடன்பாட்டுக்குறிப்புவினையாலணையும் பெயருமாம். இரண்டு அடியிலும் உடையவரென்றே பொருள்கொள்ளுதல், திரிபிலக்கணத் துக்கு ஒவ்வாது. அல்லி யென்பதன் எதிர்மொழி - புல்லி; அது, புறவிதழைக் குறிக்கும். (44) | 45. | காந்த ளிரவலர்போற் கையேற்பக் கொன்றைகொடை | | வேந்தனெனப் பொன்சொரியும் வேங்கடமே - பூந்துளவின் | | கான்மடங்கா மார்வத்தார் காண விரும்பினர்மே | | னான்மடங்கா மார்வத்தார் நாடு. | (இ - ள்.) காந்தள் - செங்காந்தள்மலர், இரவலர் போல் கை ஏற்ப - யாசகர் யாசித்தற்கு ஏற்கின்ற கை போன்று இருப்ப, கொன்றை - கொன் |