பக்கம் எண் :

திருவேங்கடமாலை437

றைமரம், கொடை வேந்தன் என பொன் சொரியும் - ஈகைக்குணமுடைய அரசன் (அந்த யாசகர்கையிற்) பொன்னைச் சொரிவதுபோல (க் காந்தள் மலரின்மேல்) பொன்னிறமான தன்மலர்களைச் சொரிதற்கு இடமான, வேங்கடமே - , - பூ துளவின் - அழகிய திருத்துழாயினது, கான் - வாசனை, மடங்கா - மாறாத, மார்வத்தார் - திருமார்பையுடையவரும், காண விரும்பினர்மேல் - (தம்மைச்) சேவிக்க விரும்பின மெய்யடியார்களிடத்து, நால் மடங்கு ஆம் ஆர்வத்தார் - பலமடங்கு அதிகமாக வைக்கும் அன்பையுடைய வருமாகிய திருமாலினது, நாடு - திவ்வியதேசம்; (எ - று.)

முன்னிரண்டடி - வடிவுபற்றிவந்த உவமையணி. கைபோலும் மலரை "கை" என்றும், பொன்போலும்மலரை "பொன்" என்றுங் கூறியது, உவமையாகுபெயர். கொடை - 'ஐ' விகுதி பெற்ற தொழிற்பெயர். இரவலர் - இரத்தலில் வல்லவர்; விடாது இரப்பவரென்க. பூந்துளவின் கான்மடங்கா மார்வத்தார் - மிக்கபரிமளத்தையுடைய திருத்துழாய்மலையைத் திருமார்பில் எப்பொழுதும் சாத்தியுள்ளவர். நான்மடங்கு என்பதில், நான்கு என்பது - பலவென்னும் பொருளின்மேல் நின்றது; இனி, தம்மிடத்து அடியார்கள் ஒருபங்கு அன்புவைத்தால் அவர்கள் பக்கல்தாம் அவ்வன்பினளவுக்கு நான்கு பங்காக அன்புவைப்பவ ரென்றும் பொருளாம்.

(45)

46. நாகத்தின் மேற்குறவர் நன்கெறிந்த மாணிக்க
மேகத்தின் மின்புரையும் வேங்கடமே - மாகத்தின்
மாத்தாண்ட மண்டலத்தார் வாயுண் டுமிழ்ந்தளந்து
காத்தாண்ட மண்டலத்தார் காப்பு.

(இ - ள்.) நாகத்தின்மேல் - யானையின்மேல், குறவர் - குறிஞ்சிநில மாக்கள், நன்கு எறிந்த - நன்றாக வீசியெறிந்த, மாணிக்கம் - மாணிக்கமென் னும் இரத்தினங்கள், மேகத்தின் மின் புரையும் - மேகத்தினிடத்துக் காணப்படுகிற மின்னல்போல விளங்குதற்கு இடமான, வேங்கடமே -,- மா கத்தின் - பெரிய வானத்தில் விளங்குகின்ற, மாத்தாண்ட மண்டலத்தார் - சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருப்பவரும், வாய் உண்டு - (யுகாந்தகாலத்தில்) வாயினாலே உட்கொண்டு, உமிழ்ந்து - (பிரளயம் நீங்கின பொழுது மீண்டும்) வெளிப்படுத்தி, அளந்து - (திரிவிக்கிரமாவதாரத்தில் திருவடியால்) அளந்து, காத்து - (தாமான நிலையிலே) பாதுகாத்து, ஆண்ட - (ஸ்ரீராமாவதாரத்தில்) அரசாளப்பட்ட, மண் தலத்தார் - பூமியையுடையவரும் ஆகிய திருமால், காப்பு - (உயிர்களைப்) பாதுகாக்குமிடம்; (எ - று.)

கருநிறமுள்ள பெரிய மதயானைக்குக் காளமேகமும், செந்நிறமுடைய தாய் விளங்குகின்ற மாணிக்கத்துக்கு மின்னலும் உவமை யெனக் காண்க. மாணிக்கம் என்ற வடசொல், திரிந்தது. புரையும் - உவமவுருபு. மாகம் -மஹாகம் என்ற வடசொல்லின் விகாரம். மார்த்தாண்டமண்டலம் என்ற வடமொழித்தொடர், விகாரப்பட்டது. எம்பெருமான் திவ்வியமான உருவத்துடன் சூரியமண்டலத்தில் எழுந்தருளியிருத்தல்பற்றி, "மாகத்தின் மாத்