பட்டிருக்க, இரண்டுமுதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறு படுவது; இதனையும் யமகவகையில் அடக்குவர் ஒருசாரார். யமகமாவது - பலஅடிகளிலாயினும் ஓரடியிற் பலஇடங்களிலாயினும் வந்த எழுத்துத்தொ டர்களே மீண்டும்வந்து பொருள்வேறுபடுவது; இது, தமிழில் மடக்குஎனப் படும். இந்நூற்செய்யுள்களிற் சிறுபான்மை காணப்படுகிற யமகங்கள், பல அடிகளில் வந்தவை. சிறப்புப்பாயிரம். | இக்கரையந்திரத்துட்பட்டதென்னவிருவினையுட் | | புக்கரைமாநொடியுந்தரியாதுழல்புன்பிறப்பா | | மெக்கரைநீக்கிப்படித்தாரையந்தவிருவிரசைக் | | கக்கரை சேர்க்குமணவாளதாசனருங்கவியே. | (இதன்பொருள்.) மணவாளதாசன் - அழகியமணவாளதாசரது, அருங் கவி - அருமையான பாடல்களானவை, - படித்தாரை - (தம்மை) ஓதினவர்களை, - இக்கு - கரும்பானது, அரை யந்திரத்துள் பட்டது என்ன -(தன்னுள் அகப்பட்ட பொருளை) நசுக்குகின்ற ஆலையென்னும் யந்திரத்தி னுள்ளே அகப்பட்டுக் கொண்டாற்போல, இரு வினையுள் புக்கு - (நல்வினை தீவினைகளாகிய) இருவகை வினைகளினுள்ளே (ஆன்மா) அகப்பட்டுக்கொ ண்டு, அரை மா நொடியும் தரியாது - அரைமாநொடி யென்னுஞ் சிறிதளவு பொழுதேனுங் கவலையற்று நிற்காமல், உழல் - அலைந்துதிரிதற்கு இடமாகிற, புல் பிறப்பு ஆம் - இழிவான பிறப்புக்களாகிய, எக்கரை - மணல்மேட்டை, நீக்கி - கடக்கச்செய்து, - அந்த இரு விரசைக்கு அக்கரை சேர்க்கும் - அந்தப் பெரிய விரஜாநதிக்கு அக்கரையிலுள்ள பரமபதத்திற் சேர்த்துவிடும்; (என்றவாது) மணவாளதாசனருங்கவி, படித்தாரை, புன்பிறப்பாம் எக்கரை நீக்கி விரசைக்கு அக்கரை சேர்க்கும் என அந்வயங் காண்க. அழகிய மணவாள தாசரால் இயற்றப்பட்ட திருவேங்கடத்தந்தாதிச் செய்யுள்களைப் படித்தவர்கள் ஒழித்தற்குஅரிய பிறப்பை யொழித்துப் பிரகிருதிசம்பந்தமற்று விரஜாநதியில் நீராடிப் பரமபதஞ் சேர்வரென இந்நூற்பயன் கூறு முகத்தால், இந்நூலின் சிறப்பையும், இந்நூலாசிரியரது தெய்வப்புலமையையும் தெரிவித்தவாறாம். அநந்த கோடிபிரமாண்டங்களடங்கிய மூலப்பிரகிருதிக்கு அப்புறத்தே விரஜாநதிக்கு அப்பால் ஸ்ரீமந்நாராயண னெழுந்தருளியிருக்கும் பரமபதம் உள்ள தாதலால், "அந்த இருவிரசைக்கு அக்கரைசேர்க்கும்" எனப்பட்டது. "இக்கரை ........ உழல்" என்றது, பிறப்புக்கு அடைமொழி. உயிர் இருவினையுள் அகப்பட்டுத் தன்வசமின்றிப் பரவசமாய் வீடுபெறாது வருந்துதற்கு, கரும்பு ஆலையிலகப்பட்டு நொருங்கிச்சிதைதலை உவமைகூறினார். நல்வினையும் பிறத்தற்குஏதுவாதலால் அதனையுஞ்சேர்த்து "இருவினை யுட்புக்கு" என்றார்; "இருள்சே ரிருவினையுஞ் சேரா இறைவன், பொருள் |