பக்கம் எண் :

492திருவேங்கடத்தந்தாதி

சேர் புகழ்புரிந்தார்மாட்டு" என்றார் திருவள்ளுவனாரும். தேவசன்மம் நல் வினைப்பயனாற் பெரிதும் இன்பநுகருமாறு நேர்வதாயினும் அத்தேவர்க ளும் நல்வினைமுடிந்தவளவிலே அவ்வுடம்புஒழிய மீளவும் இவ்வுலகத்திற் கருமவசத்திற்குஏற்ப வேறுபிறவிகொள்பவராதலும், உயிரைப்பந்தப்படுத் துவதில் பொன்விலங்கும் இருப்புவிலங்கும் போலப் புண்ணியசன்மமும் பாவசன்மமும் சமமேயாதலும், எல்லாக்கருமங்களையும் முற்றும்ஒழித்தவர் களே சிற்றின்பத்துக்கும் பெருந்துன்பத்துக்குமே இடமான எழுவகைப் பிறப்புக்களிலும் புகுதாமற் பேரின்பத்துக்கேஇடமான மீளாவுலகமாகிய முத்தியிற் சேர்ந்து மீளவும்பிறத்தலிலராவ ரென்பதும் உணர்க.

மா என்பது - எண்ணலளவைகளில் ஒன்று; அது, இருபதில் ஒன்று அதிற்பாதி, அரைமா. நொடி - மனிதர் இயல்பாக ஒருமுறை கைந்நொடி த்தற்கு வேண்டும் பொழுது; ஒருமாத்திரைப்பொழுது; உம் - இழிவுசிறப்பு. பிறப்புக் கடத்தற்கு அரிதென்பது தோன்ற, அதற்கு மணல்மேடு உவமை கூறப்பட்டது. எக்கர் = எக்கல்: ஈற்றுப்போலி. யந்திரம் யமன் யதியது யஜ்ஞம் யஜுர் என்ற வடசொற்கள் - தமிழில் எந்திரம் எமன் எதி எது எச்சம் எசுர் என்று விகாரப்பட்டுவருதல்போல, யக்ஷர் என்ற வடசொல் எக்கர் என்றுவிகாரப்பட்ட தெனக்கொண்டு, "புன்பிறப்பாம்எக்கரை நீக்கி" என்பதற்கு - இழிந்தபிறப்புக்களாகிய யக்ஷர்களை (பூதகணங்களை) விலக்கி யென்று பொருளுரைத்தலு மொன்று. தன்னில்மூழ்குபவர் ரஜோகுணம் தீரப்பெறு மிட மாதலால், விரஜா என்று பெயர். இக்ஷு, யந்த்ரம், விரஜா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. கவி - வடசொல்; பாடுபவனது பெயராகிய இது, இலக்கணையாய், அவனாற்பாடப்பட்ட பாடல்களின்மேல் நிற்கும்; கர்த்தாவாகுபெயர். என்ன - உவமவுருபு. இருவினை - இரண்டு + வினை. இருவிரசை - இருமை + விரசை: இருமையென்ற பண்பு, பெருமையின்மே லது. "இக்கரையந்திரத்துட் பட்டதென்ன விருவினையுட்புக் கரைமாநொ டியுந்தரியா துழல்" என்றது, உவமையணி. "புன்பிறப்பாம் எக்கரை நீக்கி" என்றது உருவகவணி. படித்தாரை எக்கரை நீக்கி - இரண்டுசெயப்படு பொருள் வந்த வினை. அந்த என்ற சேய்மைச்சுட்டு - பிரசித்தியையும், மேன்மையையுங் குறிக்கும். அக்கரை - அந்தக்கரை: (எதிர்மொழி - இக்கரை.)

ஒருபெயரின் ஒரு பகுதியைக்கொண்டு அப்பெயர்முழுவதையுங் குறி ப்பதொரு மரபுபற்றி, அழகியமணவாளதாசரை "மணவாளதாசன்" என்றார். "மணவாளதாசனருங்கவி" என்றவிடத்துத் தொக்குநின்ற ஆறனுருபு - செய்யுட்கிழமைப்பொருளில் வந்தது; "கபிலரகவல்", "கம்பராமாயணம்" என்ற விடங்களிற் போல: (வேங்கடத்தந்தாதி என்றவிடத்துத் தொக்கு நின்ற ஆறனுருபின்பொருளோடு இப்பொருளுக்கு உள்ளவேறுபாடு கருதத் தக்கது; அங்கு ஆறனுருபு - விஷயமாக வுடைமையாகிய சம்பந்தப்பொரு ளில் வந்தது: "விஷ்ணுபுராணம்", "விநாயகரகவல்" என்றவற்றிற்போல.)

இக்கவி - அபியுக்தரி லொருவர் செய்ததென்பர். இது, வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தனியன் எனப்படும். (நூலினுள்அடங்காது தனியே பாயிரமாய் நிற்றல்பற்றியது, அப்பெயர்; "அன்" விகுதி - உயர்வுப்பொருளது.)