பக்கம் எண் :

518திருவேங்கடத்தந்தாதி

அங்கை - அகங்கையுமாம்; "அகமுனர்ச்செவிகைவரி னிடையன கெடும்" என்பது விதி. குவிக்கும், உயிர்க்கும், திகைக்கும் - செய்யுமென்முற் றுக்கள் பெண்பாலுக்கு வந்தன. திகைத்தல் - அறிவழிதல். "நின்னையுன்னி" என்பது, மத்திமதீபமாகக்கொண்டு முன்னும் பின்னுங் கூட்டப்பட்டது. ஐயில் = அயில்; திரிபுநயத்தின்பொருட்டுவந்த முதற்போலி. அயிற்கண் - உவமத்தொகை. மகளிர்கண்ணுக்கு வேல்உவமை, கூரியவடிவிலும் ஆடவர்க்கு நோய்செய்தலிலு மென்க. "கண்ணுறங்காது" என்ற பாடத்துக்கு - இவளுடைய கண்கள் உறங்காவென்க; சாதியொருமை. விபீஷணன், கந்யா, கருணா என்ற வடசொற்கள் விகாரப்பட்டன. விபீஷணன் என்ற பெயர் - (பகைவர்க்கு) மிகவும்பயங்கர னென்றும் நல்லோர்க்குச் சாந்த மூர்த்தியாய்ப் பயங்கரனாகாதவ னென்றும் காரணப்பொருள் படும். வாண, பேர் - வாழ்ந, பெயர் என்பவற்றின் மரூஉ. இன்மை - இல்லாமை யெனக் கொண்டால் செயப்படுபொருள்குன்றியவினையும்; உடையதாகாமை யெனக்கொண்டால் செயப்படுபொருள்குன்றாதவினையுமாம்; "கன்னியிலம்" என்ற விடத்து, இன்மை - செயப்படுபொருள் குன்றாததாய்நின்றது. அல்ல என்ற எதிர்மறைப்பலவின்பால்முற்று, (வேறு இல்லை உண்டு என்பன போல) இருதிணைனயம்பால் மூவிடத்துக்கும் பொதுப்படவழங்குதலைஇலக் கியங்களிற் காண்க; இது, புதியனபுகுதல்.

எம்பெருமானது பூர்ணாநுபவத்தைப் பெறாதபோது பலவாறு வருந்துகிற ஐயங்காரது நிலைமைகளை அவர்பக்கல்அன் புடையரான அறிவுடையாளர் அப்பெருமானது சந்நிதியில் விண்ணப்பஞ்செய்து, இவர்பக்கல்திருவருள் புரிகவென்று பிரார்த்தித்தல், இதற்கு உள்ளுறைபொருள். "அயிற்கண்உறங் காள்" என்றது, அவரது கூரியஞானம் சங்கோசமடையாத தன்மையைக் குறிக்கும். "உயர்வீடணனை மன்னியிலங்கையில் வாழ்கென்றவேங்கடவாண" என்றது, எம்பெருமானது சரணாகதரக்ஷணத்வத்தில் ஈடுபாட்டினால். இந்த ஐயங்கார்போல ஆத்மஸ்வரூபபூர்த்தியுடைய அடியாரைப் பெறுதலரிதென் பார், "மற்றோர்கன்னி யிலம்" என்றாரென்க. விவரம் சம்பிரதாயம்வல்லார் வாய்க் கேட்டுஉணர்க.

(15)

16.கடமாமலையின்மருப்பொசித்தாய்க்குக்கவிநடத்தத்
தடமாமலைவற்றவாளிதொட்டாய்க் கென்றனிநெஞ்சமே
வடமா மலையுந்திருப்பாற்கடலும்வைகுந்தமும்போ
லிடமாமலைவற்றுநின்றுங்கிடந்துமிருப்பதற்கே.

(இ - ள்.) கடம் - மதத்தையுடைய, மா - பெரிய, மலையின் - மலைபோன்ற (குவலயாபீடமென்னும்) யானையினது, மருப்பு - தந்தங்களை, ஒசித்தாய்க்கு - ஒடித்திட்டவனும், - கவி நடத்த - வாநரசேனைகளை நடத்தியழை த்துக்கொண்டு (இலங்கைக்குச்) செல்லுதற்பொருட்டு, தடம் ஆம் அலைவற்ற - பெரிதான கடல் வற்றுமாறு, வாளி தொட்டாய்க்கு - ஆக்நேயாஸ் திரத்தைப் பிரயோகித்தவனுமான உனக்கு, - வட மா மலையும் திருப்பாற் கடலும் வைகுந்தமும் போல் - வடக்கின்கணுள்ள சிறந்ததிருமலையான திரு