பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி517

அழகியகைகளைக்கூப்பிவைத்துத் தொழுவாள்; உயிர்க்கும் - (தன்னுடைய துயரம் பொறுக்க மாட்டாமையால்) பெருமூச்சுவிடுவாள்; திகைக்கும் - (பரிகார மொன்றும் பெறாமையால்) மோகித்துக்கிடப்பாள்; (நின்னை உன்னி) - உன்னையே சிந்தித்தலால், இலங்கு ஐயில் கண் உறங்காள் - பிரகாசிக்கின்ற வேலாயுதம்போன்ற கண்களை மூடித் துயில்கொள்ளாள்; மற்று ஓர் கன்னி இலம் - (நாங்கள் இவளையன்றி) வேறொருபெண்ணை உடையோமல்லோம்; (ஆதலால்), கைக்கின் நின் பேர் கருணைக்கடல் அல்ல - (எங்கள்ஏகபுத்திரியான இவள்பக்கல் இரங்கி இவளை அங்கீகரியாமல் நீ) வெறுத்து விடுவை யானால் நினதுபெயர் தயாசிந்து என்பது தகுதியுடையதாகாது; (எ - று.) - ஈற்றுஏகாரம் - தேற்றம்

தலைமகனோடு கூடிப்பிரிந்த தலைமகள் பிரிவாற்றாமையாற்படுகிற பல வகைத் துன்பங்களையுங் கண்டு ஆற்றமாட்டாளான செவிலித்தாய் தன்ஆற் றாமைமிகுதியால் அத்தலைமகனை எதிரில்நிற்கின்றவாறுபோலப் பாவித்து அவனைவிளித்து அவன்முன்னிலையிலே இவளுடைய நிலைமைகளையெல்லாஞ் சொல்லி இவள்பக்கல்இரங்கவேண்டுமென்று வேண்டிய பாசுரம்,இது. இதனை நற்றாயிரங்கலென்றலு முண்டு நம்மாழ்வார் திருவாய்மொழியில் "கங்குலும்பகலும்" என்றதொடக்கத்துத் திருப்பதிகத்தில் "கங்குலும்பகலுங் கண்டுயிலறியாள்", "இவள்திறத்து என்செய்கின்றாயே", "வெவ்வுயிர்த்து யிர்த்துருகும்", "சிந்திக்குந் திசைக்குந் தேறுங் கைகூப்பும்" என்று அருளிச்செய்தமை காண்க. ரஜோகுண தமோகுணங்களால் மிக்குத் தீயனவே செய்யுங்கொடிய அரக்கர்கோஷ்டியில் ஒருவனாயிருந்தும் சத்வகுணமேமிக்கு நல்லனவேசெய்யுமியல்பினனான விபீஷணனது ஞானசீலங்களின் மேன்மை தோன்ற, "உயர் வீடணன்" என்றார். இராமபிரான் இராவணாதியரை அழித்தற்பொருட்டுப் பெரியவாநரசேனையைச் சித்தப்படுத்திக்கொண்டு புறப்பட்டுக் கடற்கரைசேர்ந்தவளவில், இராவணன் தம்பியான விபீஷணன் தான்சொன்ன நல்லறிவைக் கொள்ளாத தமையனை விட்டுவந்து இராமபிரானைச் சரணமடைய, அப்பெருமாள் அவனுக்கு அபயமளித்து அப்பொழுதே அவனை இலங்கைக்குஅரச னென முடிசூட்டி அவனால் இலங்கையின் நிலைமையையறிந்து அவனுடனே கடல்கடந்து இலங்கைச்சார்ந்து அங்குப் பெரும்போர்புரிந்து இராவணனைச் சேனையோடும் புத்திரமித்திராதிய ரோடும் கொன்று, முன்சொன்னபடி விபீஷணனை இலங்கையரசனாக்கிச் சீதையை மீட்டுக்கொண்டு மீண்டன னென்ற வரலாறுபற்றி, "வீடணனை மன்னியிலங்கையில்வாழ்கென்ற வேங்கடவாண" என்றாள். இவ்விளியினால், பகைவர்கோட்டியிற்சேர்ந்த வலிய ஓர் ஆண்மகனை நின்னைச்சரணமடைந் தவனென்றமாத்திரம்பற்றி ஆட்கொண்டு வாழ்வளித்த நீ உனது உறவைப் பெற்று உன்னையன்றி வேறுகதியிலளாகிய மெல்லியலாளான இப்பெண் மகள் பக்கல் இரக்கங்கொண்டு இவளைப் பரிபாலிக்க வேண்டாவோ? என்ற குறிப்புத் தோன்றும். நினது கருணைக்கடல் என்ற பெயர் பொருளுள்ளதாம்படி இவளிடத்துக் கண்ணோட்டஞ் செய்தருளுதல் கடமை யென்பாள் "கைக்கின் நின்பேர் கருணைக்கடலல்லவே" என்றாள்.