னைபண்ணாது - எனதுவாயும் தலையும் (முறையே அவர்களைத்) துதித்து உரைத்தல் செய்யாது வணங்காது; (எ - று.) "மறந்தும்புறந்தொழாமாந்தர்" என்றபடி தேவதாந்தரபஜநஞ் செய் யாமையில் தமக்குஉள்ள உறுதியை வெளியிட்டார். அனையார் முகங்காட் டினும் என்பதற்கு - பெற்றதாயார்(போல அன்பொழுகும் இனிய) முகத்தைக் காட்டினாலும் என்று உரைத்தலும் உண்டு: அனையார் = அன்னையார். போற்றியுரைசெய்யாது வந்தனைபண்ணாது வாக்கும் சென்னியும் என்பது, போற்றியுரைசெய்யாது வாக்கு, வந்தனைபண்ணாது சென்னிஎன முறையே சென்றுஇயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள். "வாக்கு மென் சென்னியும்" என்றவிடத்து இடைநின்ற "என்" என்றது முன்நின்ற "வாக்கு" என்றதனோடும், பின்நின்ற "சென்னி" என்பதனோடும் சென்று இயைதல், மத்திமதீபம் (இடைநிலைவிளக்கு). மனம் மொழி மெய் என்னுந் திரி கரணங்களுள் மொழிமெய்கள் தேவதாந்தர வழிபாடு செய்யாமையைக் கூறவே, அவற்றின்தொழிற்குக் காரணமான மனம் அவர்களைக்கருதா தென் பதும் பெறப்படும்; "உலகமுண்ட, திருக்கந்தரத்தனை யல்லா தெண்ணே னொருதெய்வத்தையே" என்பர் அழகரந்தாதியில். ஐயா -ஆர்யன் என்ற வடசொல் பிராகிருதபாஷையில் அய்யன்என்று விகாரப்பட்டுத் தமிழிற் போலிவகையால் ஐய னென்று வழங்கி ஈறுகெட்டு ஈற்றயல் நீண்டு விளி யேற்றது. த்வந்த்வம் என்ற வடமொழி, துவந்த மென்று விகாரப்பட்டது; (தொந்தமெனச்சிதைந்தும் வழங்கும்;) இரட்டையென்பது,பொருள்; இங்கு இருவினையின்மேல் நின்றது: அதனையுடையவன், துவந்தன்; அதன்மேல் ஐ - இரண்டனுருபு. கண்ணுதல் - நெருப்புக்கண்ணை நெற்றி யிலுடையவன்; வேற்றுமைத்தொகை யன்மொழி. அனையார் என்பது அவர் என்று பொருள்படும்போது, அகரச்சுட்டு - பகுதி;ன் ஐ - சாரியைகள், ஆர் - பலர் பால்விகுதி. முகங்காட்டினும் என்ற உம்மையால், முகங்காட்டாதபோது வழிபடுதலின்மை தெற்றென விளங்கும். செய்யாது, பண்ணாது - எதிர்மறை யொன்றன்பால்முற்றுக்கள். வாக் - வடசொல். "நின்னையல்லால்" என்பது, "போற்றியுரைசெய்யாது," "வந்தனைபண்ணாது" என்பவற்றோடு இயையும். (தலைவனைப்பிரிந்ததலைவியின் ஆற்றாமைகண்ட செவிலித்தாய் இரங்கல்.) | 15. | சென்னியிலங்கைகுவிக்கு முயிர்க்குந் திகைக்கு நின்னை | | | யுன்னியிலங்கையிற்கண் ணுறங்காளுயர்வீடணனை | | | மன்னியிலங்கையில்வாழ்கென்றவேங்கடவாண மற்றோர் | | | கன்னியிலங் கைக்கினின்பேர்கருணைக்கடலல்லவே. | (இ - ள்.) உயர் - (அறிவொழுக்கங்களினால்) உயர்ந்த, வீடணனை - வீபீஷணனை, மன்னி இலங்கையில் வாழ்க என்ற - "நிலைபெற்று இலங்கா புரியில் அரசனாய் வாழ்வாயாக" என்று சொல்லி முடிசூட்டி அநுக்கிரகித்த, வேங்கட வாண - திருவேங்கடமலையில் வாழ்பவனே! - (உன்னைக்கூடிப் பிரிந்த இந்தஎமதுமகள்), நின்னை உன்னி சென்னியில் அம் கை குவிக்கும் - (தான் வேண்டியதைப்பெறுதற்காக) உன்னைக்குறித்துத் தன்தலையின்மேல் |