தேவதாந்தரங்களை வழிபடுதலை விட்டுப் பரதேவதையை வழிபட்டுக் கஜேந்திராழ்வான்போலத் துயர்தீர்ந்து முத்திபெறுவீ ரென்றபடி. ஸ்ரீமகா விஷ்ணுவே பிரஹ்மருத்ரேந்த்ராதி தேவர்கட்கெல்லாம் முதற்பெருந்தேவ னென்ற மறைபொருள், அப்பெருமானைக் கஜேந்திராழ்வான் மற்றையபெ யர்களாற்குறியாமல் ஆதிமூலமேயென்று குறித்து விளித்ததனால் இனிது வெளியாயிற்று என்பது, இறுதிவாக்கியத்தின் கருத்து. "தான் மூலமென்பது அறிவித்திடான், அக்கரவு அம்புவிமேல் வேழமே வெளியாக்கியதே" என்றார் திருவரங்கத்தந்தாதியிலும். பகுத்தறிவிற்குறைவுள்ள இயல்பின தான ஐயறிவுயிராகிய விலங்குக்கு இருந்த விவேகந்தானும் ஆறறிவுயிராய்ப் பகுத்தறிவுநிரம்புதற்கு உரியரான உங்கட்கு இல்லையாயிற்றே யென்று ஏசுவார், "சிறியீர்" என்று விளித்தார். யாற்றுநீர்ப்பெருக்கு முதலியவற்றைத் தான் கடக்கமாட்டாதவன் பிறரை அதுகடத்துவது உண்டோ? தமது பிறவித் துன்பத்தை விலக்கிக்கொள்ள மாட்டாத தேவதாந்தரங்களை நீங்கள் உங்கள் துன்பத்தையொழித்துப் பிறவிக்கடல் கடத்துமாறு வேண்டுதல் பேதைமையன்றோ? வீழ்வார்க்கு வீழ்வார் துணையாவரோ? என்று உறுத்திக் கூறுவார், "பிறவிதாங்கடத்தாரைக் கடத்துமென் றேத்துதிர்" என்றார். "வந்தவினை தீர்க்க வகையறியார் வேளூரர், எந்தவினை தீர்ப்பா ரிவர்" என்பர் பிறரும். ("இறைவ னிவனென வறியா திதரதேவ ரிணையடியைப் பணிந்துதிரி யேழையீர் நா, னறைவ னிதுதிட மாதிமூலமேயென்று அஞ்சிறு கண்மதயானை யழைத்தபோ தஞ், சிறைவனசத்திருமுகப் புள்ளூர்ந்து வந்து செகமறியும்படியளித்த தேவதேவன், நறைவனவஞ்சனகிரிமாலல்ல னோகாண் நாடியவற்றொழுது கதிநண்ணுவீரே" என்ற திருவேங்கடக்கலம் பகமுங் காண்க. வேங்கடத்து நின்றருள் என்றும், கயத்துளாம்விலங்கு என்றும், இயையும். தாரா - வடசொல். (13) | 14. | ஐயாதுவந்தனைநாயேனையஞ்சனவெற்பவென்றுங் | | | கையா துவந்தனை நின்னையல்லாற்கண்ணுதன்முதலோர் | | | பொய்யாதுவந்தனையார்முகங்காட்டினும்போற்றியுரை | | | செய்யாதுவந்தனைபண்ணாது வாக்குமென்சென்னியுமே. | (இ - ள்.) ஐயா - ஐயனே! அஞ்சன வெற்ப - அஞ்சநாத்ரி என்னும் ஒருபெயரையுடைய திருவேங்கடத்தி லெழுந்தருளியிருக்கின்றவனே! துவந் தனை - இருவினைத்தொடர்புடையேனாகிய, நாயேனை - நாய்போற்கடைப் பட்டவனான என்னை, என்றும் கையாது - எக்காலத்தும் வெறுத்திடாத படி, உவந்தனை - மகிழ்ந்து அடியவனாக அங்கீகரித்தாய்; நின்னை அல்லால் - (இங்ஙனம் அடியேனை ஆட்கொண்டருளிய தேவாதிதேவனான) உன்னை(த் துதித்தலும் வணங்குதலும்) அல்லாமல், - கண்நுதல் முதலோர் - சிவன்முத லிய தேவர்கள், பொய்யாது வந்து - மெய்யாகவே (என்முன்) வந்து பிரதிய க்ஷமாகி அனையார் முகம் காட்டினும் - அவர்களுடைய முகத்தை வலியக் காட்டினாலும், என் வாக்கும் சென்னியும் போற்றி உரை செய்யாது வந்த |