யினும் நான் வெளிப்படையாச்சொல்லுகிறேன், அதன்படியாயினுஞ் செய்யுங்க ளென்றாள். "மதுரைப்புறத் தென்னையுய்த்திடுமின்," "ஆணையால் நீரென்னைக்காக்கவேண்டி லாய்ப்படிக்கேயென்னையுய்த்திடுமின்" என்பவை முதலாகிய அருளிச்செயல்களைக் காண்க. உகந்தது என்ற வினையாலணையும் பெயர், இரண்டனுருபையேற்கையில் இடையிலே தகரவொற்று விரிந்து உகந்தத்தை யென்று நின்றது. அஞ்சு = ஐந்து; முழுப்போலி. தத்து - துன்பம். கெடாது - இங்குப் பிறவினை; இழவாமல் எனினுமாம். கிம்சுகம் என்ற பலாச மரத்தின்பெயர் - அதன்பூவுக்கும், தத்தை என்ற கிளியின் பெயர் - அதன்மொழிக்கும் முதலாகுபெயராம். பலாசமலர் - உதட்டுக்குச் செம்மை மென்மை அழகுகளிலும், கிளிமொழி - சொல்லுக்கு இனிமையிலும் உவமம். இதழ் சொல் கிஞ்சுகம் தத்தை அனையீர் என்றது, இதழ் கிஞ்சுகத்தையும், சொல் தத்தையையும் அனையீர் என முறையே சென்று இயைதலால், முறைநிரனிறைப்பொருள்கோள். எம்பெருமானைஇடையீடின்றிச்சேரப்பெறாத நிலையில் காலவிளம்பம் பொறுக்கமாட்டாமையாற் காலம்நீட்டித்ததாகத் தோன்ற வருந்துகிற ஐயங்கார் தமதுஅன்பர்களைநோக்கி "இனி யான் எம்பெருமானது நிரந்தராநுபவம் பெற்று உய்யுமாறு என்னை நீங்கள் அவனுகந்தருளின திருப்பதியிற் கொண்டுபோய்ச் சேர்த்திடுங்கள்" என்று வேண்டுதல், இதற்கு உள்ளுறை பொருள்; விவரம் கண்டுகொள்க. (12) | 13. | வேங்கடத்தாரையுமீடேற்றநின்றருள்வித்தகரைத் | | | தீங்கடத்தாரைப்புனைந்தேத்திலீர் சிறியீர் பிறவி | | | தாங்கடத்தாரைக்கடத்துமென்றேத்துதிர் தாழ்கயத்து | | | ளாங்கடத்தாரைவிலங்குமன்றோசொல்லிற்றைமற்றே. | (இ - ள்.) சிறியீர் - (அறிவொழுக்கங்களிற்) சிறியவர்களே! - ஆரையும் ஈடேற்ற - எல்லாரையும் (பிறவிப்பெருங்கடலினின்று) கரையேற்றிப் பாதுகாத்தற்பொருட்டு, வேங்கடத்து நின்றருள் - திருவேங்கடமலையில் நின்ற திருக்கோலமாய் எழுந்தருளியிருக்கின்ற, வித்தகரை - ஞானசொரூபியான எம்பெருமானை, தீங்கு அட தாரை புனைந்து ஏத்திலீர் - (உங்கள்) பிறவித் துன்பங்களை (அவன்) அழிக்குமாறு (அவனுக்குப் பிரியமான திருத்துழாய் முதலிய) மாலைகளைச் சாத்தித் துதிக்கின்றீரில்லை; (மற்று), பிறவி தாம் கடத்தாரை - (தங்கள்) பிறவியைத் தாங்கள் விலக்கிக்கொள்ள மாட்டாத சிறுதெய்வங்களை, கடத்தும் என்று ஏத்துதிர் - (எங்களைத் துன்பத்தினின்று) ஈடேற்றுவீராக" என்றுசொல்லிப் பிரார்த்தித்துத் துதிக்கிறீர்கள்; தாழ் கயத்துள் ஆம் - ஆழ்ந்த தடாகத்திலே (முதலைவாயில்) அகப்பட்டுக் கொண்ட, கடம் தாரை விலங்கும் அன்றோ - மதநீர்ப்பெருக்கையுடைய மிருகசாதியாகிய யானையுமல்லவோ, ஐயம் அற்று சொல்லிற்று - சந்தேகந்தீர்ந்து (ஸ்ரீமந்நாராயணனை ஆதிமூலமே யென்று கூப்பிட்டு) உண்மைப் பொருளை யுணர்த்திற்று; (எ - று.) |