பக்கம் எண் :

திருவேங்கடத்தந்தாதி593

களிலே (கிடந்து) ஒளிவீசப்பெற்றதும் மதிள்கள் சூழ்ந்ததுமான ஸ்ரீரங்கத்தை யுடையவ னாகிய, அப்பன் வேங்கடவன் - ஸ்வாமியான திருவேங்கட முடையான், மறு கூடு மருவாமல் நம்மை வாழ்விப்பன் - (இவ்வுடம்புநீங்கிய பின்) மற்றோருடம்பிற்சேராதபடி நம்மை வாழச்செய்வன் (மீண்டும் பிறப்பில்லாதபடி நமக்கு முத்திதந்து அதில் நம்மை அழிவின்றிப் பேரின்பநுகர்ந்து வாழ்ந்திருக்கச்செய்வன்); (எ - று.)

சிவபிரான் பிரியங்கொண்டு சூடுபவற்றில் அறுகம்புல்லும் ஒன்றாதலால், "அறுகூடு தரித்தான்" என்றார்; சிவபூசைக்கு உரிய பத்திரபுஷ்பாதிகளில் அறுகம்புல்லும் ஒன்றாதல் காண்க. இச்சா என்ற வடசொல், இச்சையென விகாரப்பட்டது. அடிக்கு - உருபுமயக்கம். ஊடலாவது - இன்பநிலையில் அவ்வின்பத்தை மிகுவிக்குமாறு ஆடவர்மீது மகளிர் கோபித்தல்; இது, பிரணயகலக மெனப்படும். செல்வம் நிரம்பிய மகளிர் அங்ஙனம் கோபங் கொள்ளுகின்றபொழுது தாம் அணிந்துள்ள ஆபரணங்களைக்கழற்றித் தெருவில் எறிதலையும், அனைவரும் செல்வவான்களாதலால் அங்ஙனம் பிறர்கழித் தெறிந்தவற்றை எவரும் விரும்பியெடுத்துக் கொள்ளாராக அவை அங்கங்கேயே கிடந்து விளங்குதலையும், "கொல்லுலைவேற்கணல்லார் கொழுநரோடூடி நீத்த, வில்லுமிழ்கலன்கள்யாவும் மிளிர்சுடரெறிக்குமாற்றால், எல்லியும் பகலுந் தோன்றா திமையவருலகமேய்க்கும், மல்லன் மாவிந்தமென்னும் வளநகர்" என்ற நைடதத்துங் காண்க. ஊடுமாதர் - வினைத்தொகை. பூணப்படுவது பூண் எனக்காரணக்குறி. "செம்பொன் மதிலேழுடுத்த திருவரங்கப் பெருங்கோயில்" என்றபடி ஏழுமதில்கள் சூழப்பெற்ற தாதலால், அச்சிறப்புத் தோன்ற, "மதிலரங்கம்" என்றார். பறவைதங்குதற்கு இடமாகிற கூடு போல உயிர்தங்குமிட மாதலால், உடல், 'கூடு' எனப்பட்டது; உவமையாகு பெயர்; "கூடுவிட்டிங், காவிதான்போயினபின்பு" என்ற ஒளவையார்பாடலையுங் காண்க. பந்தமோக்ஷங்களுக்கு மனம் காரணமாதலால், 'மாமனம்' எனப்பட்டது; இனி, மனத்தைத் தம்வசப்படுத்துதற் பொருட்டு அதனை 'மாமனமே' எனக் கொண்டாடி விளித்தன ரெனினுமாம். மூன்றாமடி - வீறுகோளணி.

தேவதாந்தரபஜநம் பந்தத்துக்கே காரணமாதலால், அவ்வழியிற்செல்வதைவிட்டு மோக்ஷத்தை யடையுமாறு பாகவதபஜநஞ் செய்வா யென்று தம்மனத்துக்கு அறிவுறுத்தினார்.

இச்செய்யுளில் முன்னிரண்டடிகளிலும், பின்னிரண்டடிகளிலும் தனித்தனி யமகம் காண்க; மேல் 98 - ஆஞ் செய்யுளும் இது.  

(84)

85.மாமனங்காந்தவல்வாய்ப்புள்ளையேவமடித்துப்பித்த
னாமனங்காந்தவன்றோடவெய்தோ னறும்பூங்கொடிக்குத்
தாமனங்காந்தன் றிருவேங்கடத்தெந்தை தாள்களிலென்
றீமனங்காந்தங்கவரூசிபோலென்றுசேர்வதுவே.

(இ - ள்.) மாமன் - மாமனான கம்சன், அங்காந்த வல் வாய் புள்ளை ஏவ - திறந்த வலியவாயையுடைய பறவையை (பகாசுரனை) அனுப்ப, மடித்து -