பக்கம் எண் :

602திருவேங்கடத்தந்தாதி

குர கதம் என்ற வடசொல், (ஒற்றைக்) குளம்புகளாற் செல்வதென்று பொருள்படும். பருத்தவடிவமும் வலிமையும் படைக்கலங்களால் அழித்தற்கருமையும்பற்றி, தோள்கள் குன்றங்க ளெனப்பட்டன. குன்றங்கள் என்ற உபமானப்பொருள், ஒத்தலும் வைகுந்தநல்குதலும் விடையேழ் தழுவுதலுமாகிய செய்கையிற் பயன்படும்பொருட்டு உபமேயமாகிய தோள்களினுருவத்தைக் கொள்ளத் திரிதலால், 'தோள்களாகிய குன்றங்கள்' என்றது. திரிபணி; உருவக மன்று. குன்றங்கள் என்ற ஈற்றில் நின்ற சொல், முன்னுள்ள ஒத்தன நல்கின தழுவின என்ற முற்றுக்களோடு முடிந்தது, கடைநிலைத்தீவகம்.

(93)

94.குன்றுகளத்தனையுங்கடறூரக்குவித்திலங்கை
சென்றுகளத்தனைவோரையுமாய்த்துத்திருச்சரத்தா
லன்றுகளத்தனையட்டானை யப்பனை யாய்மகடோ
டுன்றுகளத்தனை யேத்தவல்லார்க்கில்லைதுன்பங்களே.

(இ - ள்.) குன்றுகள் அத்தனையும் - மலைகளையெல்லாம் கடல் தூர குவித்து - கடல்தூர்ந்திடும்படி (வாநரங்களைக்கொண்டுகொணர்ந்து) ஒருங்கு சேர்த்து (அணைகட்டி), இலங்கை சென்று - (அதன்வழியாகப்) போய் இலங்காபுரியைச் சார்ந்து, களத்து அனைவோரையும் மாய்த்து - போர்க்களத்தில் அரக்கர்களெல்லாரையுங் கொன்று, திரு சரத்தால் - சிறந்த அம்பினால் (பிரமாஸ்திரத்தால்), அன்று - அந்நாளில், களத்தனை (கள்ளத்தனை) - வஞ்சகனான இராவணனை, அட்டானை - கொன்றவனும், ஆய் மகள் தோள்துன்று களத்தனை - இடைச்சாதிமகளான நப்பின்னையினது கைகளால் தழுவப்பட்ட கழுத்தையுடையவனுமான, அப்பனை - திருவேங்கடமுடையானை, ஏத்த வல்லார்க்கு - துதிக்கவல்லவர்கட்கு, துன்பங்கள் இல்லை - எவ்வகைத்துன்பமும் உளவாகா; (எ - று.)

அனைவர் அனைவோர் எனச் சிறுபான்மை ஈற்றயல்அகரம் ஓகாரமாயிற்று. இராவணன் சீதையை வஞ்சனையாற் கவர்ந்துசென்றதனால், 'கள்ளத்தன்' எனப்பட்டான். களத்தன் - தொகுத்தல்விகாரம். ஆய் - சாதிப்பெயர். தோள் - இங்கே, கை; சீவகசிந்தாமணியில், "தோளுற்றொர் தெய்வந்துணையாய்" என்றவிடத்திற் போல. நான்காமடியில், களம் - வடசொல்.

(94)

95.துன்பங்களையுஞ் சனனங்களையுந் தொலைவறுபே
ரின்பங்களையுங்கதிகளையுந்தரு மெங்களப்பன்
றன்பங்களையும்படி மூவரைவைத்துத்தாரணியும்
பின்பங்களையுமிழுதுமுண்டானுடைப்பேர்பலவே.

(இ - ள்.) மூவரை - (பிரமன் சிவன் இலக்குமி என்ற) மூன்றுபேரை, தன் பங்கு அளையும்படி - தனது திருமேனியின் பாகங்களிலே பொருந்தும்படி, வைத்து-, தாரணியும் - (கற்பாந்தகாலத்திலே) பூமியையும், பின்பு - பிறகு (கிருஷ்ணாவதாரத்திலே), அங்கு - அவ்விடத்தில் (திருவாய்ப்பாடியில்), அளையும் இழுதும் - தயிரையும் நெய்யையும், உண்டான் - அமுதுசெய்தவ