நின்றது; இது, தொகுத்தலென்னுஞ் செய்யுள்விகாரத்தின்பாற் படும். திருகவி, மங்கை மணவாளவள்ளல் என்பன - ஒருபொருளின்மேல்வந்த பலபெயர்கள். மங்கைநாடு, சோழமண்டலத்தின் உட்பகுதிகளுள் ஒன்று; மண்ணியாற் றங்கரையில் திருவாலிதிருநகரியோடே சேர்ந்து அதில் ஏகதேசமென்ன லாம்படியிருக்கும் திருக்குறையலூர் முதலிய ஊர்களைத் தன்னிடத்தேகொ ண்டது: திருமங்கையாழ்வாரும் இதில் திருவவதரித்தவரே, ஒருபெயரின்ஒரு பகுதியைக் கொண்டு அப்பெயர் முழுவதையுங் குறிப்பதொரு மரபுபற்றி அழகியமணவாளதாசரை 'மணவாளன்' என்றார்; (இதனை, வடநூலார், நாமை கதேசேநாமக்ரஹணம் என்பர்.) வள்ளல் - வரையாது கொடுப்பவன்; உதாரி: வண்மையென்னும் பண்பினடியாப் பிறந்த பெயர்; அல் - பெயர் விகுதி. மணவாளவள்ளல் - மணவாளனாகிய வள்ளல்எனஇருபெயரொட்டு. வேண்டுவார் வேண்டியபடியெல்லாம் பலவகைக்கவிகளைத் தட்டுத்தடையின்றிப் பாடித்தருமியல்பின ராதலாலும், எல்லாச்செல்வத்தினுஞ் சிறந்த முத்திச் செல்வத்தைத் தரவல்ல திவ்வியப்பிரபந்தங்களைப் பாடி எல்லாவுயிர்களும் எளிதில் உய்யுமாறு வழங்கியருளியவ ராதலாலும், 'வள்ளல்' எனப்பட்டனர். திரு கவி மங்கை என்பதற்கு - செல்வத்தால் மூடப்பெற்ற (அதாவது - செல்வம்நிறைந்த) மங்கை யென்ற ஊரில் அவதரித்த என்று உரைப்பாரு முளர்; இப்பொருளில், கவிமங்கையென்பது - வினைத்தொகை: செய்வினை, செயப்பாட்டுவினைப்பொருளது. இனி, திருகு அவிஎன்றுபிரித்து, மாறுபாடு (வஞ்சனை) இல்லாத என்று உரைத்து, மணவாளவள்ளலுக்கு அடைமொழி யாக்குவர் ஒருசாரார். "திரு கவிமங்கை மணவாள வள்ளல்" என்ற தொடர் சிறந்த கவநசக்தியாகிய பெண்ணுக்குக் கணவனாகிய உதாரி யென்ற ஒரு பொருள் தொனிக்குமாறு நிற்றலுங் காண்க; கவித்திறத்தைத் தன்வசத்திற் கொண்டு நடத்துபவ னென்றவாறு. மணவாளன் - மணம் + ஆளன்: கலியாணஞ்செய்துகொண்ட புருஷன். வள்ளல் சூடும் என இயையும. "ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே" என்றபடி மிகப் பெரிய பல சோலைகளை யுடைய மலை யாதலால், "மாலிருஞ்சோலைமலை" என்று திருநாமம்; மால் - பெருமை, இருமை - பெருமை; இவ்விரண்டும் தொடர்ந்து ஒருபொருட்பன்மொழியாய் நின்றன. மால் - உயர்ச்சி; இருமை - பரப்பு என்று கொண்டு, உயர்ந்து, பரந்த சோலைகளை யுடைய மலையென்றலும் உண்டு. திரு - மேன்மைகுறிக்கும் அடைமொழி. பரதகண்டத்தில் தென்னாடாகிய பாண்டியநாட்டி லுள்ள மலையாதல்பற்றி, "தென்திரு மாலிருஞ்சோலைமலை" எனப்பட்டதாகவும் கொள்ளலாம். வடக்குத் திருமலையாகிய திருவேங்கடத்தோ டொத்த தெற்குத்திருமலை யாதலாலும், "தென்" என்ற அடைமொழி திருமாலிருஞ்சோலைமலைக்கு ஏற்கும்; அதனை "வடதிருவேங்கடம்" என்பது காண்க. (தென் என்று - அழகாதல்; தெற்குத்திக்கிலேயான வென்னுதல், மால் என்றும் இருமை என்றும் இரங்கும் பெருமைக்கு வாசகமாய்,சோலையினுடைய ஓக்கத்தையும் பரப்பையும் சொல்லுகிறது. இப்படியிருக்கிற சோலைகளை யுடைத்தாகையாலே, மாலிருஞ்சோலை யென்று அத்தேசத்துக்கு நிரூபகம்; "வநகிரியிறே" என்ற ஸ்ரீமண |