"கூடுவிட்டு இங்கு ஆவிதான்போயினபின்பு" என்றார் பிறரும். சரமம் - முடிவு. ஆதிமூலமேயென்று கூவியழைத்து ஓலமிடுதற்கு உபயோகமாகத் துதிக்கைமாத்திரமே வெளிபட்டுநிற்க மற்றைஉடம்புமுழுவதும் முதலையின் வாய்ப்பட்ட தென்னுங்கருத்து அமைய 'தடத்து அழுந்திவாடுகைக்குஞ் சரம்' என்றனரென்க; "கைம்மானமதயானையிடர்தீர்த்தகருமுகிலை," "கரா மலையத் தளர் கைக்கரி யெய்த்தே, அராவணையிற்றுயில்வோ யென" என்றவற்றோடு இதனை ஒப்பிடுக. விண் - விண்ணவர்க்கு இடவாகுபெயர். ஒரு காலத்திலே தேவர்களெல்லாரும் இராவணன் முதலிய ராக்ஷசர்களின் உபத்திரவம் பொறுக்கமாட்டாமல் ஸ்ரீமகாவிஷ்ணுவைச் சரணமடைந்து வேண்ட, அப்பிரான் தசரதசக்கரவர்த்திகுமாரனாக ஸ்ரீராமனாய்த் திருவவ தரித்து அரக்கர்களனைவரையும் அழித்து நல்லோரைக் காத்தருளின னென்க. வாள் அரக்கர் - வாள்போன்ற அரக்க ரென உவமைத்தொகை; கொடுமையால் எப்பொழுதும் பிறர்க்குத் தீங்குசெய்தற்பொருட்டு வாளாயுதத்தை யேந்திநிற்கின்ற அரக்க ரெனினும் அமையும். திருமாலிருஞ்சோலைமலைக்கு 'ருஷபகிரி' யென்று பெயர்வந்ததன்கார ணம்:- தருமதேவதை பிரளயகாலத்திலும் தான்அழியாதிருக்கும் உபாயங் கருதித் திருமாலைக்குறித்துத்தவம்புரிந்து வரம்பெற்று மலைவடிவமாகி அந்த அழகப்பிரானைத் தன்மீதுகொண்டு நிலைபெற்றது எனவும், தருமதேவதைக்கு விருஷபவடிவம் உள்ளதனாலும் தருமத்துக்கு விருஷமென்று ஒரு பெயர் உள்ளதனாலும் அம்மலை விருஷபகிரியென்றும் விருஷகிரியென்றும் வழங்கப்பட்ட தெனவும் நூல்கள் கூறும்; "தரும மோருருத்தாங்கி மால் பத்தியின்றலைப்பட், டொருமையோங்கிய மாலிருஞ்சோலை சூழ்நாட்டின், பெருமை யாவரே பேசுவார்" என்ற கூடற்புராணமுங் காண்க. இதுநிற்க: அனந்தகுண பாண்டியனைக் கொல்லுதற்பொருட்டுச் சமணர்கள்செய்த அபிசாரவோமத்தினின்று தோன்றிய பசுவடிவமான அசுரன் அச்சமணர்கள் விருப்பத்தின்படி பாண்டியராஜனைக் கொல்லுதற்காக மதுரையை அணுகியபொழுது, அவ்வரசனும் அந்நகரத்தாரும் சோமசுந்தரக்கடவுளை வணங்கி முறையிட, அச்சிவபெருமான் தமது சந்நிதானத்திலுள்ள ருஷப வடிவமான நந்தியைநோக்கி 'சமணர்களேவியபசுவை நீபோய் வென்றுவரக் கடவாய்' என்று கட்டளையிட்டவளவில், அவ்விடபம் ஆரவாரித்துக் கொண்டு விரைந்துசென்று அப்பசுவைக்கிட்டித் தனது பேரழகைக் காட்ட, அந்த மாயப்பசு அவ்விடபத்தின்மீது இச்சைகொண்டு ஆசைநோய் மிக்கு வலியொடுங்கி, இறந்துவிழுந்து மலைவடிவமாயிற்று: அதுவே பசுமலை; பின்பு அந்த இடபமும் உலகத்தாரறியுஞ்சான்றாகத் தனது தூலசரீரத்தை இடப மலையாக அங்கே நிறுத்திவிட்டுச் சென்றது என்றலும் உண்டு; "உலகறிகரி யாத் தன்பேருருவினை யிடபக்குன்றாக் குலவுற நிறுவி" என்ற பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற்புராணமும், "வினையறவந்திறைஞ்சு மெழின்மழ விடையை நோக்கி, மனமகிழ்ந்தணிகளோடு மதிதவழுயர்பினோடு, மினிமை யிற்கிடத்திநாமமிடபவெற்பென்னப் போந்த, தனுவொடுங்கிடந்த தோங்கத் தண்டலைமலையதாகி," "ஆங்கதுகண்டோரெல்லா மதிசயித் தருளை |