ன்ற பிரானை - புஜபலத்தால் மல்லர்களைக் கொன்ற உபகாரகனுமான எம் பெருமானை, அடைந்து - சரணமடைந்து, அடியாரொடும் கூடுகைக்கு - (அவனுடைய) அடியவர்களோடுஞ் சேர்வதற்கு, நினையாய் - கருதுவாய்.(எ - று.) ஆல் - ஈற்றசை; செய்யுளினிறுதியில் நிற்பதுமாத்திரமே யன்றி, செய்யுளடியினிறுதியிலும், வினைமுற்றினிறுதியிலும் நிற்கும் இடைச்சொல்லும் பொருள்தராதாயின் ஈற்றசையெனவே படும். இனி, ஆல் - ஆதலால் என்பதன் விகாரமுமாம்., சுந்தரத் தோளன் = ஸுந்தரபாஹு. திரு மங்கை - இலக்குமி; திருவாகிய மங்கை என இருபெயரொட்டு; என்றும் மாறாத இளமைப்பருவமுடைமையால், "மங்கைழுஎனப்பட்டாள். இதுவரை வீணேகழிந்த நாள்களைக்குறித்துக் கழிவிரக்கங்கொள்ளு கிறவளவோடு நில்லாமல், இனி வாழும் நாளுள் ஒருபொழுதேனும் எம்பெருமானைத் தியானித்தாலும் அது பயன்படும் என்பது தாற்பரியம். (6) | 7. | கூடுகைக்குஞ்சரமத்தடியேற்குக்கொடியவஞ்சஞ் | | | சாடுகைக்குஞ்சரணந்தரவேண்டுந் தடத்தழுந்தி | | | வாடுகைக்குஞ்சரங்காத்தீர் விண்வாழ்கைக்கும்வாளரக்கர் | | | வீடுகைக்குஞ்சரங்கோத்தீர் விடைவெற்பின்வித்தகரே. | (இ - ள்.) தடத்து - தடாகத்திலே, அழுந்தி - (முதலையின்வாய்ப்பட்டு) மூழ்கி, வாடு - வாட்டமடைந்த, கை - துதிக்கையையுடைய, குஞ்சரம் - யானையை, காத்தீர் (அங்குச்சென்று) பாதுகாத்தருளியவரே! விண் வாழ்கைக்கும் - வானுலகத்தவர் (தேவர்கள்) வாழும்படியாகவும், வாள் அரக்கர் வீடுகைக்கும் - கொடிய இராக்கதர்கள் அழியும்படியாகவும், சரம் கோத்தீர் - (ஸ்ரீ ராமாவதாரத்திலே) அம்புகளை (விற்கொண்டு) தொடுத்திட்டவரே! விடை வெற்பின் வித்தகரே - வ்ருஷபகிரியாகிய திருமாலிருஞ்சோலைமலையில் எழுந்தருளியிருக்கிற ஞானஸ்வரூபியே! - கூடு கைக்கும் சரமத்து - உடம்பை (உயிர்) வெறுத்துநீங்கும்படியான அந்திமகாலத்திலே, அடியேற்கு - (நுமக்கு) அடிமைப்பட்டவனான எனக்கு, கொடிய வஞ்சம் சாடுகைக்கு - கொடுமையானவஞ்சனைக்கருத்துக்களை (என்மனத்தில்எழவொட்டாதபடி) அடித்துத்தள்ளுதற்காக, உம் சரணம் தர வேண்டும் - உமது திருவடிகளைத் தந்தருளவேண்டும்; (எ - று.) உடம்பைவிட்டு உயிர்நீங்கிப்போங்காலத்துக் கர்மவசத்தால் எந்த நினைப்பு உண்டாகிறதோ அந்தப்பிறவி அவ்வுயிர்க்கு அடுத்தபடியாக நேர்கின்றது என்பது நூல்துணிபாதலால், அங்ஙனம் அக்காலத்து அடியேனுக்குத் தீயசிந்தனையெழாதபடி உன்திருவடிகளை என்மனத்திற் பதியவைத்தருளவேண்டு மென்பதாம். இனி, "காடிய வஞ்சஞ் சாடுகைக்கு" என்பதற்கு - (யமதூதர்களுடைய) கொடிய வஞ்சனைச்செயல்களை அடித்துத்தள்ளுதற்கு என்று உரைப்பினும் அமையும். சரமத்துத் தரவேண்டும் என இயையும். உயிராகிய பறவை வந்துபுகுந்து சிலகாலம் தங்கிப் பின்பு நீங்கிச்செல் லுங் கூடுபோலுதலால், உடம்பு, "கூடு" எனப்பட்டது; உவமையாகுபெயர்; |