பக்கம் எண் :

பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு7

சிரயித்தவர்களுட் பிரதானரும், இராமாநுசநூற்றந்தாதி அருளிச்செய்தவருமாகிய திருவரங்கத்தமுதனாரது திருக்குமார ரென்று பலரும் திருப்பேரனாரென்று சிலரும் வழங்கிவருவதும், கீழ்க்கூறிய காலக்கணக்கையே வற்புறுத்தும்.

இவர்பேரனார், ஸ்ரீரங்கநாயகியாரூசல்செய்த கோனேரியப்பனையங்கார்.

இன்னும் இவரது வைபவவிசேஷங்களை வல்லார்வாய்க் கேட்டு உணர்க.

அடியில்வருகிற புலவர்புராணச்செய்யுள்கள் இங்குநோக்கத்தக்கவை:-

(1)" தென்கலைவயிணவன் செகமெலாம்புக
  ழின்கவிப்பிரபலன் இணையில்பட்டர்தம்
  நன்கணத்தினர்களிலொருவன் நாரணன்
  பொன்கழலன்றி மற்றொன்றும் போற்றிலான்.

(2)   மருவழகியமணவாளதாசனென்
  றொருபெயர்புனைந்தவன் உரைக்குமோர்சொலாற்
  பொருள்பலதருங்கவிபொறிக்கும்பொற்பினிற்
  பெருமிதனெனப் பலர்பேசும் பெற்றியான்.
(3) செவ்வியசொற்சுவைசிறிதுந்தேர்ந்திடா
 தவ்வியப்போர்பொருமவர்களன்றிமற்
 றெவ்வியற்புலவருமிசைந்துநாடொறுந்
 திவ்வியகவியெனச்செப்புஞ்சீர்த்தியான்.
(4) தேனையுமமுதையுமனையதீஞ்சொலோர்ந்து
 ஆனையின்கன்றெனவமைக்கும்பாடலான்
 ஏனையபாடலொன்றேனுமோதிலான்
 பூனைபோல்வஞ்சனைப்புந்திகொண்டிலான். "

இவரை மிகுதியாகச் சிவதூஷணை செய்கின்றவ ரென்று சைவர்கள் பழித்தற்குப் புலவர்புராணமுடையார் கூறும் சமாதானத்தை அடியில்வருகின்ற செய்யுள்களிற் காணலாம்:-

(15)"சிவனைநிந்தனைசெய்தவனேயென
 இவனைச்சிற்சிலிளஞ்சைவரேசுவார்
 அவன்தன்மாயவனாகத்திற்பாதியென்று
 உவந்துபாடியபாக்களுமுள்ளவே.
(16) என்றென்றுந்தனதிட்ட தெய்வத்தையே
 நன்றென்றேத்திடல்ஞானிகள்சம்மதம்
 அன்றென்றோதவொண்ணாததனாலவன்
 குன்றென்றச்சுதனைக்குறிக்கொண்டதே.