பக்கம் எண் :

6பிள்ளையார்பெருமாளையங்கார் வரலாறு

பின்பு இவர் ஒருநாள் தமதுதிருவடிகளிற் சம்பந்த முடையவர்களை நோக்கி 'நமக்கு அந்திமதசை பசுவினாலே நேரிடும்' என்று சொல்லி அப்படியே சக்கரவர்த்தித்திருமகனைச் சேவித்துக்கொண்டு ஸ்ரீவைகுண்டநாதர் சந்நிதியிற் சேவிக்கும்பொழுது, ஒரு நொண்டிப்பசு வந்து தவறி இவர்மேல் விழ, அது விழுந்ததனாலாகிய துன்பத்துடனே இவர்

"துளவ துளவவெனச் சொல்லுஞ் சொற் போச்சே
 அளவி னெடுமூச்சு மாச்சே - முளரிக்
 கரங்கால் குளிர்ந்ததே கண்ணும் பஞ்சாச்சே
 இரங்கா யரங்கா வினி "

என்று சொல்லித் திருநாட்டை யலங்கரித்தனர்.

இவர், சிலேடை திரிபு யமகம் அந்தாதி கலம்பகம் ஊசல் முதலியன விசித்திரமாகப்பாடுவதில் ஒப்புயர்வில்லாது மிக வல்லவர்; இது, இவர்செய்துள்ள நூல்களால் இனிதுவிளங்கும்: அன்றியும், 'திவ்வியகவி' என்ற இவரது பட்டப்பெயர்தானே இதனை வற்புறுத்தும். இவர் இயற்றிய திருவரங்கக்கலம்பகம் - வெண்பாப்பாடுதலில் வல்ல புகழேந்தியும், விருத்தம்பாட வல்ல கம்பரும், அந்தாதிக்கு எடுத்த ஒட்டக்கூத்தரும், கலம்பகத்திற்கென்று சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற இரட்டையர்களும், சந்தம்பாடுதலிற் சமர்த்தரான படிக்காசுப்புலவரும் முதலிய மகாவித்வான்கள் சேர்ந்து செய்தாலொத்த சிறப்பினை யுடையது. இங்ஙன மிருக்க, ஒருசாரார் 'ஐயங்கார் அம்மானையில் அடிசறுக்கினார்' என்று குறைகூறுவது, சிறிதும் சரியன்று; திருவரங்கக்கலம்பகத்திலுள்ள "தேனமருஞ்சோலை" என்ற தொடக்கத்து அம்மானைச்செய்யுளினது ஈற்றடியின் பிற்பகுதியிற் பொருந்திய சிலேடைப்பொருள் நயத்தையும் சரித்திரவமைப்பையும் ஆழ்ந்தகருத்தையும் ஊன்றி நோக்குமிடத்து, அங்ஙனம் இழித்துரைப்பாரது பழிப்புரை வெற்றுரையே யா மென்பது தெற்றென விளங்கும்: அன்றியும், அக்கூற்று அழுக்காற்றினா லாகியதேபோலும; அந்த அம்மானைச்செய்யுளின் அருமை பெருமைகள் இங்கு விரிப்பிற் பெருகும். இன்னும், இவர் செய்துள்ள பிரபந்தங்களெல்லாம், ஸ்ரீவைஷ்ணவசம்பிரதாயத்தில் உள்ள நம்மாழ்வார் முதலிய ஆழ்வார்கள் பன்னிருவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்களின் ஸாரார்த்தங்களும், நாதமுனிகள் முதலிய ஆசாரியர்களுடைய அருளிச்செயல்களின் விசேஷார்த்தங்களும் பொதிந்திருத்தல் மாத்திரமேயன்றி, "சொல்நோக்கும் பொருள்நோக்கும் தொடைநோக்கும் நடைநோக்கும் துறையின்நோக்கோடு எந்நோக்குங் காண இலக்கிய" மாகியும் இருப்பன.

இவர், ஸ்ரீவைஷ்ணவவிசிஷ்டாத்வைத மதஸ்தாபநாசாரியரான ஸ்ரீ பகவத்ராமாநுஜாசார்யரென்கிற ஸ்ரீபாஷ்யகாரரது அந்தரங்கசிஷ்யரான கூரத்தாழ்வானுடைய குமாரராகிய ஸ்ரீபராசரபட்டரது சிஷ்ய ராதலாலும், அந்தப்பட்டரது திருவவதாரம் சாலிவாகனசகாப்தம் ஆயிரத்துநாற்பத்தைந்தில் என்று தெரிதலாலும், இவரதுகாலம் இற்றைக்குச் சற்றேறக் குறைய எழுநூற்றறுபது வருஷத்துக்குமுன்ன ராகின்றது; (இப்பொழுது நிகழ்கிற சாலிசகம் - 1836.) இவரை ஸ்ரீபாஷ்யகாரரது ஸ்ரீபாதத்தி லா