நானறியாநன்மையெல்லாம் கூட்டிவைத்த' என்றார். (கூடு - பால்பகாவஃறி ணைப்பெயராய்ச் சரீரங்களை யுணர்த்துமென்க.) இதன்விவரத்தை, ஸ்ரீவசந பூஷணம் முமுக்ஷுப்படி முதலிய ரஹஸ்யக்ரந்தங்களிலும், அவற்றின்வியாக் யாநங்களிலும் பரக்கக்காணலாம். "ஞான மநுட்டாந மிவை நன்றாகவே யுடைய, னான குருவை யடைந்தக்கால் - மாநிலத்தீர், தேனார்கமலத் திருமாமகள் கொழுநன், தானே வைகுந்தந்தரும்" என்றபடி ஸதாசார்ய ஸம்பந்தம் முக்திக்குக் காரணமாய் நிற்றலாலும், அதுவும் அவ்வெம்பெருமானது இன்னருளாலேயே நிகழவேண்டிய தாகையாலும், "நானறியா நன்மையெல்லாந் தான்கூட்டிவைத்த நலம் - பட்டர்க்கு ஆட்பட்ட பயன் கண்டீர்' என்றார். கூட்டமாம் சிட்டர்க்கு வாய்த்த திருவரங்கன் - "பத்துடை யடியவர்க் கெளியவன்". சிட்டர் = ஸிஷ்டர்: நல்லொழுக்க முடையவர்: பெரியோர். பண்டிதரைக் குறிக்கின்ற "பட்டர்' என்ற பொதுப்பெயர், சிறப்பாக இவர்க்கு இட்டு வழங்கப் பெற்றது. (5) (திருப்பதிகளின் வகை.) | 6. | ஈரிருபதாஞ்சோழ மீரொன்பதாம்பாண்டி | | யோர்பதின்மூன்றாமலைநா டோரிரண்டாஞ் - சீர்நடுநா | | டாறோடீரெட்டுத்தொண்டை யவ்வடநாடாறிரண்டு | | கூறுதிருநாடொன்றாக் கொள். | (இ - ள்.) சோழம் - சோழநாட்டுத் திருப்பதிகள், - ஈர் இருபது ஆம் - நாற்பதாகும்; பாண்டி - பாண்டியநாட்டுத் திருப்பதிகள், - ஈர் ஒன்பது ஆம் - பதினெட்டாகும்; மலை நாடு - மலைகள் நிறைந்த சேரநாட்டுத் திருப்பதிகள், - ஓர் பதின்மூன்று ஆம் - பதின்மூன்றாகும்; சீர் நடுநாடு - சிறப்புப் பொருந்திய நடுநாட்டுத் திருப்பதிகள், - ஓர் இரண்டு ஆம் - இரண்டாகும்; தொண்டை - தொண்டைநாட்டுத் திருப்பதிகள், - ஆறோடு ஈர் எட்டு - இரு பத்திரண்டாகும்; அ வட நாடு - தூரத்திலுள்ள வடநாட்டுத் திருப்பதிகள், - ஆறு இரண்டு - பன்னிரண்டாகும்; கூறு - சிறப்பித்துச் சொல்லப்படுகின்ற, திருநாடு - பரமபதமென்ற திவ்வியலோகம், ஒன்று - ஒன்றாகும்; ஆ - இவ்வாறாக, கொள் - (திருமாலின் திருப்பதிகள் நூற்றெட்டென்பதை) அறிந்துகொள்வாயாக; (எ - று.) - இச்செய்யுள், நூலாசிரியர் தமது மனத்தை விளித்துக் கூறியதாகவேனும், சீடனைநோக்கிக் கூறியதாகவேனும் கொள்ளத்தக்கது. சோழம் முதலிய நாட்டின் பெயர்கள் - அந்நாட்டிலுள்ள திருமால் திருப்பதிகளைக் குறித்தன: இடவாகுபெயரின் பாற்படும். நடுநாடு - தொண்டைநாட்டுக்கும் சோழநாட்டுக்கும் இடையிலுள்ள தேசம். தொண்டை - தொண்டைமா னென்னும் அரசனால் ஆளப்பட்ட நாடு; தொண்டை மான்' என்றது, குலத்துமுன்னோரில் ஒருவனது பெயராய் அவ்வரசனது பரம்பரையோர்க்கெல்லாம் வழங்கும்; இப்பெயரின் காரணம் வருமாறு:- தொண்டைநாட் டிராசதானியான காஞ்சீபுரத்தி லிருந்த தொண்டைமா னிளந்திரையனைக் குறித்துப் பாடியதாகிய பெரும்பாணாற்றுப்படையில் |