போன்றவ னென்றும், அடிமைப்பட்டவ னென்றும் பொருள்படும். 'அடியேன்' என்றது, ஆத்துமாவை. சடம் = ஜடம்: அறிவில்லாத பொருள்; அசித்து. போரத்தாழ்வான சடம் - புழுநெளிந்து புண்ணழுகி யோசனைநாறுங் கழிமுடை நாற்றத்தையுடைத்தாய், ஊறி யுவர்த்தக்க ஒன்பதுவாய்ப்புலனுங் கோதிக்குழம்பலைக்குங் கும்பமான மாமிசதேகம். 'போட்டு' என்றதனால், இந்தச்சரீரம் இவர்க்குப் பெருஞ்சுமையாயிருக்கின்ற தென்பது, போதரும். (பட்டர்.) | 5. | நான்கூட்டில்வந்தவன்றே நானறியாநன்மையெல்லாந் | | தான்கூட்டிவைத்தநலந்தான்கண்டீ - ராங்கூட்டச் | | சிட்டருக்குவாய்த்த திருவரங்கனின்னருளாற் | | பட்டருக்காட்பட்டபயன். | (இ - ள்.) கூட்டம் ஆம் சிட்டர்க்கு - திரள்திரளாகவுள்ள பெரியோர் கட்கு, வாய்த்த - (கருணைசெய்யுமாறு வாத்ஸல்யத்துடன்) பொருந்தியிருக்கின்ற, திருவரங்கன் - ஸ்ரீரங்கநாதன், இன் அருளால் - (தனது) இனிமையான (நிர்ஹேதுக) கிருபையினால், - நான் -, கூட்டில் - இந்தச் சரீரத்தில், வந்த - வந்துபிறந்த, அன்றே - அப்பொழுதே, நான் அறியா நன்மை எல்லாம் - என்னால் அறியப்படாத நல்வினைகளையெல்லாம், தான் கூட்டி வைத்த - தான் உண்டாக்கிய, நலம் - நன்மையென்பது, - பட்டருக்கு - ஸ்ரீபராசரபட்டர்க்கு, ஆள்பட்ட - சிஷ்யனாக அமையப்பெற்றதாகிய, பயன் - பயனாகும்; (எ - று.) - கண்டீர் - முன்னிலையசை; தேற்றமுமாம். தான் - அசை. ஸர்வேஸ்வரன் என்னையும் அறியாமல் என்னிடத்து நிகழ்ந்த சுகிருத விசேஷங்களையே காரணமாகக்கொண்டு, ஸ்ரீ பராசரபட்டரது திருவடிகளில் ஆஸ்ரயிக்குமாறு செய்து அதனால் என்னை ஈடேற்றின னென்பதாம். 'நான் அறியா நன்மை' என்பது - அஜ்ஞாதஸுக்ருத விஸேஷங்க ளெனப்படும்; அவையாவன - 'என்னூரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை நோக்கினாய், அவர்கள் விடாயைத் தீர்த்தாய், அவர்கட்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்' என்றாற்போல எம்பெருமான் தானே வியாஜமாகக் கொள்ளுமவை: இவ்வாறு அப்பிரான் கொள்வதற்குக் காரணம் - ஸர்வமுக்திப்ரஸங்கம் வராமைக்காக என்பர்: ஆயின், எம்பெருமானது திருவருள் நிர்ஹேதுகம் என்பது எவ்வாறு? ஸஹேதுகமாகவன்றோ தோற்றுகின்றது? என்னில், - அன்று: சிருஷ்டிகாலத்திலே இவ்வாத்மா உருமாய்ந்து கரணகளேபரங்களின்றி இறகொடிந்த பறவை போலவாகி உரை மெழுக்கிற் பொன் போல மூலப்ரக்ருதியிற் கிடக்கையில், எம்பெருமான் 'இவ்வாத்மா நம்மை யடைந்து உஜ்ஜீவநம் அடையவேணும்' என்று தனது நிர்ஹேதுகமான பரமகிருபையாலே கரண களேபரம் முதலியவற்றைக் கொடுத்து ஸ்ருஷ்டித்த பின்பன்றோ, இவ்வாத்மாவுக்கு அஜ்ஞாதஸுக்ருத விஸேஷங்களைக் கற்பிக்கத்தக்க நிலைமை வந்தது. ஆகையால், எம்பெருமானது நிர்ஹேதுககிருபையே ஆத்மா ஈடேறுவதற்குக் காரணமாம்: இதனை விளக்குதற்காகவே, 'திருவரங்கன் இன்னருளால் நான் கூட்டில் வந்தஅன்றே |