பக்கம் எண் :

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி755

போன்ற திருநிறமுடைய திருமாலினது ஸ்ரீ வைகுண்டலோகத்தில், எக்காலம் - எந்நாளில், செல்வான் இருக்கின்றேன் - சென்று சேரப்போகின்றேன்? (எ - று.)

இந்நூலாசிரியர்க்கு ஸ்வாசார்யரான பட்டர்க்குக் கூரத்தாழ்வான் திருத்தமப்பனா ராதல்பற்றியும் தம்குலமுதல்வரான திருவரங்கத்தமுதனார் ஸ்ரீபாஷ்யகாரருடைய திருவடிகளில் ஆஸ்ரயித்தற்குக் கூரத்தாழ்வான் புருஷகாரமாயிருந்தமைபற்றியும், அவ்வாழ்வானைப்பற்றி வணக்கம் கூறப்பட்ட தென்க. கூரமென்னுந்தலத்தில் திருவவதரித்து, எம்பெருமானுடைய திருக் கலியாணகுணகணங்களாகிய அமுதவெள்ளத்தில் முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்பவ ராதலால், இவர்க்கு இத்திருநாமம். கூரம் - தொண்டைநாட்டில் காஞ்சீபுரத்துக்கு வடமேற்கிலுள்ள தொரு தலம். இவர் - ஹாரீதகுல திலகரான ஸ்ரீராமஸோமயாஜியாரின் குமாரர்; இராமாம்சம் சங்காம்சம் ஸர்வநேத்ராம்சம்: இவரது வேறுதிருநாமங்கள் - ஸ்ரீவத்ஸசிஹ்நர், திருமறு மார்பர், நடையாடுபதஞ்சலி, ஸஞ்சாரிமஹாபாஷ்யர், யதீந்த்ரசரணர் என்பன. கூரத்தாழ்வான் அடி என்பதற்கு - பட்டர்எனப் பொருள்கொள்ளுதலும் தகும்: பட்டர் - கூரத்தாழ்வானது திருக்குமாரராதலாலும், அத்தமப் பனாரிடத்தினின்று முக்கியமான வித்யைகளையெல்லாம் அதிகரித்த சிஷ்ய ராதலாலும், ஸிஷ்யரை ஆசாரியரது திருவடியாகக் கூறுதல் மரபாதலாலுமென்க.

மிகவும் நிக்ருஷ்டமாகிய இந்தமாம்ஸதேகத்தை ஒழித்துவிட்டுத் தே ஜோமயமான திவ்யசரீரத்தோடு அந்தமில்பேரின்பத்தழிவில் வீட்டுலகத்தை யடைந்துள்ள தமதுபரமாசாரியராகிய கூரத்தாழ்வானது திருவடிகளை எப்போது கூடுவே னென்று, நூலாசிரியர் ஸம்ஸாரத்தில் வெறுப்புக்கொண்டு மிக்கஆற்றாமையோடு கூறுகின்றனரென்க. நிமிஷம் காஷ்டை கலை நாழிகை முகூர்த்தம் நாள் மாதம் வருஷம் யுகம் கற்பம் முதலிய காலவரையறை பரமபதத்தில் இல்லையாதலால், 'முக்காலமில்லாவைகுந்தம்' எனப்பட்டது. இனி, 'முக்காலமில்லா' என்பதை 'முகில்வண்ணனுக்கு' அடைமொழி யாக்கி, காலத்தினால் தோன்றுங் குற்றமற்று என்றும் ஒருபடிப்பட இருக்கிற முகில்வண்ணனென்று உரைகூறலு மொன்று. திருமாலுக்குக் காளமேகம் உவமை - கருநிறத்திலும் நெய்ப்பிலும் குளிர்த்தியிலும் கண்டோரைமகிழ்வித்தலிலும் கைம்மாறுகருதாது கருணைமழை பொழிதலிலு மென்க.

வைகுந்தம் - வைகுண்டம் என்ற வடசொல்லின் சிதைவு: குண்டம் - பாபம்; அஃது இல்லாதவர் - விகுண்டர்: அவருடைய சம்பந்தமுள்ள உலகம் - வைகுண்டம். "வஞ்சமுக்குறும்பாங் குழியைக் கடக்கும் நங்கூரத்தாழ்வான்" என்றபடி நீக்குதற்குஅரிய வித்யாமதம் தநமதம் குலமதம் என்கின்ற மும் மதங்களையும், மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை யென்கிற மூவகைப் பற்றுக்களையும் ஒழித்தவராய், உடையவரதுபேரருளுக்குப் பிரதமபாதரமாய் அவருக்கு அந்தரங்கசிஷ்யராயிருந்ததுபற்றி, 'தக்காரெண் கூரத்தாழ்வான்' என்றார். அடியேன் - இரட்டுறமொழிதலால், சரமாங்கமாகிய அடி