பெருமான் "உடையவர்' என்று ஒருநாமதேய முண்டாகுமாறு எதிராஜரை நோக்கி, "உமக்கும் உம்முடையார்க்கும் உபயவிபூதி ஐஸ்வர்யமும் தந்தோம்' என்று அருளிச்செய்கையாலும், உடையவர்க்கு முற்பட்ட ஆசாரியர்கள் அவர்திருமுடிசம்பந்தத்தாலும் பிற்பட்ட ஆசாரியர்கள் அவரது திருவடி சம்பந்தத்தாலும் உய்வுபெறுவரென்பது, ஸ்ரீவைஷ்ணவர்களின் துணிபாதலாலும், முனியெதிராசன் பேர் மொழிந்தால் இனிச் சந்மம் எதிரா என்று கூறின ரென்னலாம். "சொன்னேன்' = சொல்லுகின்றேன்: இயல்புபற்றிவந்த காலவழுவமைதி. சன்மம் - ஜந்மம்: வடமொழி. முனி - மநநசீலன்: தத்துவஞான முடையவன்: இப்பெயர், துறவறமுடையோனைக் குறிக்கும். எதிராசன் = யதிராஜன்: யதிகட்குத் தலைவன்: யதிகள்யாவரினும் மேம்பட்டிருப்பவன். பேர் - பெயர்: மரூஉ. ஸ்ரீவைஷ்ணவ விஸிஷ்டாத்வைத மத ஸ்தாபநாசார்யரும் ஸ்ரீ பாஷ்யகாரருமாகிய யதிராஜர் தமது திருவடி சம்பந்தத்தாற் பின்புள்ளோரும் தமது திருமுடி சம்பந்தத்தால் முன்புள்ளோரும் ஈடேறுமாறு குருபரம் பரையில் நடுநாயக மணியாய்ச் சிறத்தலால், அவரைப்பற்றி, இந்நூலாசிரியர் இங்குத் துதிகூறின ரென்க. இவர், தொண்டைநாட்டில் ஸ்ரீபெரும்பூதூரில் ஸ்ரீகேசவஸோமயாஜியாரின் திருக்குமாரராய்த் திருவவதரித்தவர்; இவருக்கு நல்லம்மானாகிய பெரியதிருமலைநம்பியால் இளமையில் இடப்பட்ட திருநாமம் - இளையாழ்வாரென்பது; பின்பு பஞ்சஸம்ஸ்காரஞ்செய்தபோது பெரியநம்பி 'ராமாநுஜன்' என்ற பெயரை யிட்டனர். இவர் ஸந்யாஸாச்ரமம் பெற்றபோது திருக்கச்சிப்பேரருளாளப்பெருமாள் 'ராமாநுஜமுநி' என்று பேரிட்டழைத்தனர்; உடையவர் எம்பெருமானார் பாஷ்யகாரர் கோயிலண்ணன் சடகோபன்பொன்னடி என்ற திருநாமங்களும் இவர்க்கு உண்டு; இவர் - ஆதிசேஷாம்மாவர். இவரதுசம்பந்தம் பெற்ற காரணத்தால், ஸ்ரீவைஷ்ணவசமயம், "எம்பெருமானார்தரிசனம்' என்று சிறப்பித்துக் கூறப்படும். (3) (கூரத்தாழ்வான்.) 4. | முக்காலமில்லாமுகில்வண்ணன்வைகுந்தத் | | தெக்காலஞ்செல்வானிருக்கின்றேன் - தக்காரெண் | | கூரத்தாழ்வானடியைக்கூடுதற்கு நாயடியேன் | | போரத்தாழ்வான சடம்போட்டு. | (இ - ள்.) நாய் அடியேன் - நாய்போற் கடைப்பட்டவனாகிய யான், - போர தாழ்வு ஆன சடம் போட்டு - மிகவும் இழிவையுடையதாகிய இவ்வுடம்பை (இங்கு) விட்டிட்டு, - தக்கார் எண் கூரத்தாழ்வான் அடியை கூடுதற்கு. பெரியோர்களால் நன்குமதிக்கப்பெற்ற கூரத்தாழ்வானது திருவடிகளைச் சேர்தற்கு - முக்காலம் இல்லா முகில் வண்ணன் வைகுந்தத்து - (இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும்) மூன்றுகாலங்களுமில்லாததாகிய காளமேகம் |