பக்கம் எண் :

நூற்றெட்டுத்திருப்பதியந்தாதி753

யே காப்புச்செய்யுள் கூறின ரென்க. இவ்வாழ்வார் - பகவானது அம்சமும், ஸ்ரீகௌஸ்துபத்தினது அம்சமும், சேனைமுதலியாரது அம்சமுமாவர். சடகோபன், வகுளாபரணன், பராங்குசன் என்ற பெயர்களும் இவர்க்கு வழங்கும்.

இதனால், நம்மாழ்வாரது திருவடிகளை வணங்கினால் மீண்டும் இவ்வுல கத்திற்பிறந்திறத்தலாகிய பிறவித்துயர் தீருமென, தம்மனத்துக்கு இதோப தேசஞ் செய்கின்றனரென்க. பேறு - பெறுதற்கு உரியது; புருஷார்த்தம். எஞ்ஞான்றும் மறவாது இறைஞ்சுதல் - எப்பொழுதும் விடாமல் மனத்திற் கொண்டு வணங்குதல். மனம் - மனன்: ஈற்றுப்போலி. நம்மாழ்வார் பிறந்த பொழுதேதொடங்கி உலகப்பற்றுச் சிறிதுமின்றி யிருந்தவ ராதலால், அவரை 'துறவாளன்' என்றார். நம்பி - ஆண்பாற் சிறப்புப்பெயர்.

இச்செய்யுளின் பின்னிரண்டடிகள் - திரிபு என்னுஞ் சொல்லணியின் பாற்படும்: திரிபாவது - அடிகளின் முதலெழுத்துமாத்திரம் வேறுபட்டிருக்க, இரண்டுமுதலிய பலஎழுத்துக்கள் ஒன்றிநின்று பொருள்வேறுபடுவது: இதனையும் யமகவகையி லடக்குவர் ஒருசாரார். அடுத்த இரண்டுசெய்யுள் களிலும் இவ்வணி காண்க.

(2)

(உடையவர்.)

3.முன்னேபிறந்திறந்துமூதுலகிற்பட்டவெல்லா
மென்னேமறந்தனையோவென்னெஞ்சே - சொன்னே
னினியெதிராசன்மங்க ளின்றுமுதற்பூதூர்
முனியெதிராசன்பேர்மொழி.

(இ - ள்.) என் நெஞ்சே - எனது மனமே! - முன்னே - இதற்குமுன்பு, பிறந்து இறந்து - ஜநநமரணங்களை யடைந்து, முது உலகில் பட்ட எல்லாம் - பழமையாகிய இவ்வுலகத்தில் அநுபவித்த கஷ்டங்களையெல்லாம், மறந்தனையோ - மறந்துவிட்டாயோ! என்னே - (மீண்டும் ஸம்ஸாரத்திற் செல்லாமலிருத்தற்கு உரிய வழியைத் தேடாமல் அதனிடத்திலேயே செல்கின்ற இது) என்ன விபரீதபுத்தி! சொன்னேன் - (நான் இப்பொழுது ஓர் உறுதி மொழி) கூறுகின்றேன்: (அதாவது), - இன்றுமுதல் - இன்றுதொடங்கி, பூதூர் முனி எதிராசன் பேர் மொழி - ஸ்ரீபெரும்பூதூரில் திருவவதரித்த துறவியாகிய யதிராஜனது திருநாமத்தைச் சொல்லுவாய்; (நீ அவ்வாறு சொல்வையாயின்), சன்மங்கள் இனி எதிரா - பிறப்புக்கள் இனி (உனக்கு) உண்டாகமாட்டா; (எ - று.)

இதனால், யதிராஜனது திருநாமத்தை வாயினாற்சொல்லுதலாகிய இந்தச் சிறுதொழிலொன்றினாலேயே பிறவித்துயரைக் கடத்தலாகிய பெரும்பேறு கிடைப்பதாயிருக்க, அதனைப்பெறாது ஜநநமரணங்கட்கே இடமாகிய உலகவாழ்க்கையிற் கிடந்து உழல்கின்ற தமது மனத்துக்கு நல்லுபதேசஞ் செய்கின்றனரென்க. என்னே - 'பட்டபிறகும் அறிவுவரவில்லையே!' என்று மனத்தின் அறியாமைக்கு இரங்கிக்கூறியவாறு: இகழ்ச்சிக்குறிப்புமாம். எம்