செய்வித்துவருகையில், கைப்பொருள் முழுவதுஞ் செலவாய்விட்டத னால் வழிபறித்தாகிலும் பொருள்தேடிப் பாகவத ததீயாராதநத்தைத் தடையற நடத்தத் துணிந்து வழிச்செல்வோரைக் கொள்ளையடித்து வரும்போது ஸ்ரீமந்நாராயணன் இவரையாட்கொள்ளக் கருதித் தாம் ஒருபிராம ணவேடங்கொண்டு பலஅணிகலங்களைப் பூண்டு மணவாளக் கோலமாய் மனைவியுடனே இவரெதிரில் எழுந்தருள, இவர் கண்டு களித்து ஆயுதபாணி யாய்ப் பரிவாரத்துடன் சென்று அவர்களை வளைத்து வஸ்திரஆபரணங் களையெல்லாம் அபகரிக்கையில் அம்மணமகன் காலிலணிந்துள்ள மோதிர மொன்றைக் கழற்றமுடியாமையால் அதனையும் விடாமற் பற்களாலே கடித்து வாங்க, அம்மிடுக்கை நோக்கி, எம்பெருமான், இவர்க்கு 'கலியன்' என்று ஒருபெயர் கூறினா னென உணர்க. இவர் தமதுகுடிக்குஏற்ப இளமையிலேயே ஆயுதவித்தையில் தேர்ச்சிபெற்றுச் சோழராஜனையடுத்துச் சேனா பதியுத்தியோகத்தி லமர்ந்து கொற்றவனுக்குக் கொடியவரோடு கடும்போர் நேருங்காலங்களிற் படைகளோடு முன்சென்று பராக்கிரமத்தாற் பகைவென்று பரகாலனென்று பெயர்பெற்றுப் பலமுறை வாகைசூடிவந்தவ ராதலால், 'கட்டவிழ்தார்வாட்கலியன்' என்றார்; தாரை வாளுக்கும் அடை மொழியாக்கலாம். தார் - முள்ளிமலர்மாலை யெனினுமாம். இவர்க்கு இம்மலர் மாலை உரியதாதலை, "முள்ளிச்செழுமலரோ தாரான்" என்பதனா லுணர்க. (நம்மாழ்வார்.) 2. | பிறவாதபேறுபெறுதற்கெஞ்ஞான்று | | மறவாதிறைஞ்சென்மனனே - துறவாளன் | | வண்குருகூர்வாவிவழுதிவளநாடுடைய | | தண்குருகூர்நம்பிதிருத்தாள். | (இ - ள்.) என் மனனே - எனது மனமே, - துறவு ஆளன் - பற்றின் மையுடையவரும் (பற்றற்றவரும்), வள் குருகு ஊர் வாவி வழுதி வளம் நாடு உடைய தண் குருகூர் நம்பி - அழகிய நீர்வாழ்பறவைகள் உலாவப்பெற்ற நீர்நிலைகள் சூழ்ந்த பாண்டிவளநாட்டிலுள்ள குளிர்ந்த திருக்குருகூரில் திருவவதரித்த பெரியவருமான நம்மாழ்வாரது, திரு தாள் - திருவடிகளை, - பிறவாத பேறு பெறுதற்கு - மீண்டும் பிறவாமையாகிற இலாபத்தையடையும் பொருட்டாக, எ ஞான்றும் - எப்பொழுதும், மறவாது - மறவாமல், இறைஞ்சு - வணங்குவாயாக; (எ - று.) திருமாலடியார்களிற் சிறந்த ஆழ்வார்கள் பன்னிருவருள் ஐந்தாமவராகிய நம்மாழ்வார் - மற்றையாழ்வார்கள்போல லௌகிகவிஷயஞானம் நடை யாடுகையில் எம்பெருமானருளால் ஒருகாலவிசேஷத்தில் தத்துவஞானாதிகள் தோன்றப்பெற்று அந்தப்பகவானை யனுபவிப்பதன்றித் திருத்துழாய் பரிமளத்துடனே அங்குரிப்பதுபோல இயற்கையிலேயே விலக்ஷணமான ஞானபக்திகளையுடையவ ராதலால், மிகுந்த ஏற்றமுள்ளவராய்த் தத்துவ ஞான பிரவர்த்தநத்திற் சிறந்தவராதலோடு ஸ்ரீவைஷ்ணவர்கட்கு இந்தப் பூலோகத்திற் பிரதமாசாரியருமாவர். ஆகவே, கவி இவரைப்பற்றித் தனி |