பக்கம் எண் :

872சீரங்கநாயகரூசல்

படக் கூறினர். பிள்ளைப்பெருமாளையங்கார் பாடியது - சீரங்கநாயகரூசல் என்றும், அவரது திருப்பேரனாராகிய கோனேரியப்பனையங்கார் பாடியது - சீரங்கநாயகியாரூசல் என்றும் அறிக. உயிர் ஊசலாடுவதுபோல அலைகிற பிறவித் தடுமாற்றத்தினின்று நீங்கித் தொண்டர்கள் உய்யுமாறு இந்த இரண்டு பிரபந்தங்களும் செய்யப்பட்டன வென்க. ஊசல்நீங்க ஊசல்பாடினார் என்ற நயம் கருதத்தக்கது; இது - தொடர்பின்மையணி யெனப்படும். வடநூலார் இதனை அஸங்கத்யலங்கார மென்பர்: ஒன்றைச்செய்யத் தொடங்கி அதற்குமாறான செயலைச் செய்தல், இதன் இலக்கணம். பிறவித்தடுமாற்றத்தை ஊசலாக உருவகஞ்செய்ததற்கு ஏற்ப, அண்டத்தைப் பந்தலாகவும், பற்றைக் கால்களாகவும், அறிவை விட்டமாகவும், கரணங்களைச் சங்கிலிகளாகவும், பிறப்பைப் பலகையாகவும், வினைகளை ஆட்டுபவராகவும், நரக சுவர்க்க பூமிகளிற் செல்லுதலை இறக்கம் ஏற்றம் தங்குதலாகவும் உருவகஞ் செய்தன ரென்க; முற்றுருவகவணி. நரக சுவர்க்க பூ வெளிகள் என்றதற்கு ஏற்பக் கூறாது ஏற்ற மிறக்கம் தங்கல் என மாற்றிக் கூறியது - எதிர்நிரனிறைப்பொருள்கோள். தான், ஏ - ஈற்றசைகள்.

காப்பு.

புதுவைநகர்ப்பட்டர்பிரான்சரண்கள்போற்றி
        பொய்கைபூதன்பேயார்பாதம்போற்றி
சதுமறைச்சொற்சடகோபன்சரணம்போற்றி
        தமிழ்ப்பாணன்றொண்டரடிப்பொடிதாள்போற்றி
முதுபுகழ்சேர்மழிசையர்கோன்பதங்கள்போற்றி
        முடிக்குலசேகரன்கலியன்கழல்கள்போற்றி
மதுரகவியெதிராசன்கூரத்தாழ்வான்
        வாழ்வானபட்டர்திருவடிகள்போற்றி.

(இ - ள்.) புதுவை நகர் - ஸ்ரீவில்லிபுத்தூரில் திருவவதரித்தருளிய, பட்டர்பிரான் - பெரியாழ்வாருடைய,சரண்கள் - திருவடிகள், போற்றி - வாழ்வனவாக; பொய்கை - பொய்கையாழ்வாரும், பூதன் - பூதத்தாழ்வாரும், பேயார் - பேயாழ்வாரும், (ஆகிய முதலாழ்வார்களுடைய), பாதம் - திருவடிகள், போற்றி -; சது மறை சொல் - வடமொழி நான்குவேதங்களின் பொருளையும் தமிழ்ச்சொல்லாற் பாடியருளிய, சடகோபன் - நம்மாழ்வாரது, சரணம் - திருவடிகள், போற்றி -; தமிழ் பாணன் - செந்தமிழ்ப்பாடலில்வல்ல திருப்பாணாழ்வாரும், தொண்டர் அடி பொடி - தொண்டரடிப் பொடியாழ்வாரும் ஆகிய இவர்களது, தாள் - திருவடிகள், போற்றி -; முது புகழ் சேர் - பழமையாகிய கீர்த்தி பொருந்திய, மழிசையர்கோன் - திருமழி சைப்பிரானுடைய, பதங்கள் - திருவடிகள், போற்றி -; முடி குலசேகரன் - கீரிடமணிந்த (அரசரான) குலசேகராழ்வாரும், கலியன் - திருமங்கையாழ்வாரும், (ஆகிய இவர்களது), கழல்கள் - திருவடிகள், போற்றி -; மதுரகவி -