பக்கம் எண் :

சீரங்கநாயகரூசல்873

மதுரகவியாழ்வாரும், எதிராசன் - உடையவரும், கூரத்தாழ்வான் - கூரத்தாழ்வானும், வாழ்வு ஆன பட்டர் - நல்வாழ்வுபெற்ற பட்டரும், (ஆகிய இவர்களது), திருவடிகள் -, போற்றி -; (எ - று.)

நூல்

1.திருவாழத்திருவாழிசங்கம்வாழத்
        திருவனந்தன்கருடன்சேனையர்கோன்வாழ
வருண்மாறன்முதலா மாழ்வார்கள்வாழ
        வளவில்குணத்தெதிராசனடியார்வாழ
விருநாலுதிருலெழுத்தினேற்றம்வாழ
        வேழுலகநான்மறையுமினிதுவாழப்
பெருவாழ்வுதந்தருணம்பெருமாளெங்கள்
        பெரியபெருமாளரங்கராடிரூசல்.

(இ - ள்.) திரு - இலக்குமி, வாழ - வாழவும், - திரு ஆழி சங்கம் - சங்க சக்கரங்கள், வாழ -,- திரு அனந்தன் - திருவனந்தாழ்வானும், கருடன் - பெரியதிருவடியும், சேனையர்கோன் - சேனைமுதலியாரும், வாழ -,- அருள் மாறன் முதல் ஆம் ஆழ்வார்கள் - (எம்பெருமானது) திருவருளைப் பெற்ற நம்மாழ்வார் முதலாகிய ஆழ்வார்கள் பன்னிருவரும், வாழ -,- அளவு இல் குணத்து எதிராசன் - எல்லையில்லாத நற்குணங்களையுடைய எம்பெருமானாரும், அடியார் - (அவரது) அடியார்களும், வாழ -,- இரு நாலு திருவெழுத்தின் ஏற்றம் - திருவஷ்டாக்ஷரமகாமந்திரத்தின் சிறப்பு, வாழ -,- ஏழ் உலகும் - மேலேழ் கீழேழ் என்ற பதினான்கு லோகங்களும், நால்மறையும் - நான்குவேதங்களும், இனிது வாழ - இனிமையாக வாழவும், - பெரு வாழ்வு தந்தருள் - பெரியவாழ்ச்சியைக் கொடுத்தருள்கின்ற, நம்பெருமாள் - நம்பெருமாளே! எங்கள் பெரிய பெருமாள் - எமது பெரியபெருமாளே! அரங்கர் - திருவரங்கநாதரே! ஊசல் ஆடிர் - ஊசலாடு வீராக; (எ - று.)

'வாழ' என்னும் எச்சங்கள் யாவும் 'பெருவாழ்வுதந்தருள்' என்பத னோடு இயையும். வாழ ஊசலாடிர் என இயைப்பினுமாம்.

(1)

2.உயரவிட்டகற்பகப்பூம்பந்தர்நீழ
        லொண்பவளக்கானிறுவியூடுபோட்ட
வயிரவிட்டத்தாடகச்சங்கிலிகணாற்றி
        மரகதத்தாற்பலகைதைத்தவூசன்மீதே
தயிரிலிட்டமத்துழக்கும்வெண்ணெய்க்காடித்
        தடமறுகிற்குடமாடித்தழல்வாய்நாக
மயரவிட்டன்றாடியநீராடிரூச
        லணியரங்கநம்பெருமாளாடிரூசல்.