3. | கடிமலருமதுகரமுங்குழலிலாடக் | | கத்தூரியுடன்வேர்வுமுகத்திலாட | | நெடுவிழியுமணித்தோடுஞ்*செவியிலாட | | நேர்வளையுஞ்சூடகமுங்கரத்திலாட | | வடமணியுங்கண்டிகையுந்தனத்திலாட | | மாகலையுமேகலையுமருங்கிலாடத் | | திடமறையும்பரிபுரமும்பதத்திலாடச் | | சீரங்கநாயகியாராடிரூசல். | 4. | கலைமடந்தைவணங்கியொருவடந்தொட்டாட்டக் | | கற்புடையவள்ளியொருவடந்தொட்டாட்ட | | மலைமடந்தைபரிவிலொருவடந்தொட்டாட்ட | | வானவர்கோன்மடந்தையொருவடந்தொட்டாட்ட | | வலர்மடந்தைநிலமடந்தையுலகம்வாழ | | வருண்மடந்தைபொருண்மடந்தையழகார்நெற்றிச் | | சிலைமடந்தைதிருமடந்தையாடிரூசல் | | சீரங்கநாயகியாராடிரூசல். | 5. | காரனையதிருவரங்கமணவாளர்க்குக் | | கண்களிப்பமனமுருகவறிவுசோர | | மூரலெழப்புளகமுறப்புயம்பூரிப்ப | | முகமலரமெய்குழையமோகமேற | | வாரமுதேபசுங்கிளியேமுத்தேபொன்னே | | யன்னமேயென்னம்மேயழகின்பேறே | | சீரியசிற்றிடையணங்கேயாடிரூசல் | | சீரங்கநாயகியாராடிரூசல். | 6. | வீறுபொய்கைபூதத்தாரிருபான்ஞான | | விளக்கேந்தமயிலையர்கோன்வியந்துகாண | | மாறன்மறைத்தமிழ்மதுரகவிநின்றேத்த | | வாழ்குலசேகரன்பாணன்கலியன்போற்ற | | வாறுசமயத்திருந்தோனருகில்வாழ்த்த | | வணிபுதுவைவேதியன்பல்லாண்டுபாடத் | | தேறுதொண்டரடிப்பொடிதாரடியிற்சூட்டச் | | சீரங்கநாயகியாராடிரூசல். |
* "குழையிலாட' என்பது, பாடாந்தரம். |