பக்கம் எண் :

சீரங்கநாயகியாரூசல்903

7.நாதமுனிதவமாகமாறன்பாட
        னயந்தெழுதவேதனெழுத்தழிந்தவாறும்
போதனெதிராசன்வளையாழிமண்ணோர்
        புயத்தெழுதக்கூற்றினெழுத்தழிந்தவாறு
மேதமில்கூரத்தாழ்வான்பதக்குண்டென்றே
        யெழுதிடவாதியர்களெழுத்தழிந்தவாறுந்
தீதில்குணத்தடியார்கடிரண்டுவாழ்த்தச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
8.தருக்குடனேயுமதுதிருவுளத்துக்கேற்கத்
        தங்கடங்கள்பணிவிடைகடலைமேற்கொண்டு
வருக்கமுடன்பத்துவகைக்கொத்துளோரு
        மற்றுமுள்ளபரிகரமும்வந்துசூழ
வருக்கனெனமுடிவிளங்கவழகுவீற
        வண்டர்கள்பூமழைபொழியவடியார்போற்றச்
செருக்கிவிளையாடியுகந்தாடிரூசல்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
9.மின்றாவுகொடிமதில்சூழ்கூரவேந்தன்
        வேதாசாரியனன்னையாடிரூசல்
பின்றாதபரசமயக்குறும்பறுக்கும்
        பெரியநம்பியுளத்துறைவாராடிரூசல்
கந்தாடைக்குலத்தில்வருமழகோன்வாழக்
        கருணைவிழிக்கடையருள்வாராடிரூசல்
செந்தாரும்பசுந்தாரும்புடையுலாவச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
10.ஆரணஞ்சேர்வில்லிபுத்தூருறையூர்வாழ
        வவதரித்தநாயகியாராடிரூசல்
பேரணிபூணழகுடையார்தாமேயென்னும்
        பெண்டுகடந்நாயகியாராடிரூசல்
நாரணர்பூரணர்பெரியபெருமாளெங்க
        ணம்பெருமாணாயகியாராடிரூசல்
தேரணியுநெடுவீதிபுடைசூழ்கோயிற்
        சீரங்கநாயகியாராடிரூசல்.