பக்கம் எண் :

904சீரங்கநாயகியாரூசல்

11.கோலமந்தாநிலமுலவவதனாலாடுங்
        கோகனகத்திருந்தாடுமன்னம்போல
மாலரங்கர்திருமேனிவண்மையாலு
        மழைமுகில்கண்டுகந்தாடுமயிலும்போல
வேலைகடைந்திடவதனிலெழுந்தபோது
        வெண்டிரைமேலசைந்தாடும்வீறுபோலச்
சீலமுடன்மாணிக்கத்தவிசிலேறிச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
12.குடமாடிச்சீராடிவெண்ணெய்க்காடிக்
        குரவைதனைப்பிணைந்தாடிக்கோளராவின்
படமாடிவிளையாடுமந்நாளந்தப்
        பரமனுரத்திருந்தாடும்படியேபோல
வடமாடக்குழையாடவிடைதள்ளாட
        வளையாடவிளையாடிமாலையாடத்
திடமாடக்கொடியாடத்திகழுங்கோயிற்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
13.கொந்தாருங்குழலசையவாடிரூசல்
        குலமகரக்குழையசையவாடிரூசல்
நந்தாருங்கரமசையவாடிரூசல்
        நல்கியநூலிடையசையவாடிரூசல்
சந்தாருந்தனமசையவாடிரூசல்
        தரளமணிவடமசையவாடிரூசல்
செந்தாளிற்சிலம்பசையவாடிரூசல்
        சீரங்கநாயகியாராடிரூசல்.
14.கரியகுழலசையுமெனவரிவண்டார்ப்பக்
        கழையணிதோளதிருமெனத்தொடிகளார்ப்ப
மருமலர்க்கையலங்குமெனவளைகளார்ப்ப
        வடிவமெலாம்வருந்துமெனமறைகளார்ப்ப
விருமுலைகள்குலுங்குமெனவடங்களார்ப்ப
        விடையொசிந்தேயிறுமெனமேகலைகளார்ப்பத்
திருவடிகள்சிவக்குமெனச்சிலம்புமார்ப்பச்
        சீரங்கநாயகியாராடிரூசல்.