பக்கம் எண் :

புராணகதைகள்907

கடலில் மூழ்கி மறைந்துவிட, ஞானவொளியைத்தரும் பெருவிளக்கான வேதங்கள் ஒழிந்தமைபற்றி உலகமெங்கும் பேரிருள்மூடி நலியாநிற்க, பிரமன்முதலியோ ரனைவரும் கண்கெட்டவர்போல யாதொன்றுஞ்செய்யவறியாமல் திகைத்து வருந்துவது கண்டு திருவுள்ளமிரங்கித் திருமால் ஹயக்கிரீவனாகிக் கடலினுட் புக்கு அவ்வசுரர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொன்று வேதங்களை மீட்டுக் கொணர்ந்து, ஹம்ஸரூபியாய்ப் பிரமனுக்கு உபதேசித்தருளின னென்பதாம். இவ்வரலாறு சிறிதுவேறுபடக் கூறுதலுமுண்டு.

அண்டமுண்டு ஆலிலைகலந்த கதை:- பிரமன்முதலிய சகலதேவர்களுமுட்பட யாவும் அழிந்துபோகின்ற யுகாந்தகாலத்திலே ஸ்ரீமகாவிஷ்ணு அண்டங்களையெல்லாம் தன்வயிற்றில்வைத்து அடக்கிக்கொண்டு சிறுகுழந்தைவடிவமாய் ஆதிசேஷனது அம்சமானதோர் ஆலிலையின்மீது பள்ளிகொண்டு யோகநித்திரைசெய்தருளுகின்றன னென்பதாம்.

கடல்கடைந்த கதை:- முன்னொருகாலத்தில், இவ்வண்டகோளத்திற்கு அப்புறத்திலுள்ள விஷ்ணுலோகத்துச் சென்று திருமகளைப் புகழ்ந்து பாடி அவளால் ஒருபூமாலை பிரசாதிக்கப்பெற்ற ஒரு வித்தியாதரமகள், மகிழ்ச்சியோடு அம்மாலையைத் தன்கைவீணையில் தரித்துக்கொண்டு பிரமலோக வழியாய் மீண்டுவருகையில், துர்வாசமகாமுனி எதிர்ப்பட்டு அவளை வணங்கித் துதிக்க, அவ்விஞ்சைமங்கை அம்மாலையை அம்முனிவனுக்கு அளித்திட்டாள்; அதன்பெருமையை யுணர்ந்து அதனைச் சிரமேற்கொண்ட அம்முனிவன் ஆனந்தத்தோடு தேவலோகத்திற்கு வந்து, அப்பொழுது, அங்கு வெகுஉல்லாசமாக ஐராவதயானையின்மேற் பவனிவந்துகொண்டிருந்த இந்திரனைக் கண்டு அவனுக்கு அம்மாலையைக் கைந்நீட்டிக்கொடுக்க, அவன் அதனை அங்குசத்தால் வாங்கி அந்த யானையின் பிடரியின்மேல் வைத்தவளவில், அம்மதவிலங்கு அதனைத் துதிக்கையாற் பிடித்து இழுத்துக் கீழெறிந்து காலால் மிதித்துக் துவைத்தது; அதுகண்டு முனிவரன் கடுங்கோபங்கொண்டு இந்திரனை நோக்கி "இவ்வாறு செல்வச்செருக்குற்ற நினது ஐசுவரியங்களெல்லாம் கடலில் ஒளித்துவிடக்கடவன' என்று சபிக்க, உடனே தேவர் செல்வம்யாவும் ஒழிந்தன; ஒழியவே, அசுரர் வந்து பொருது அமரரை வெல்வாராயினர். பின்பு இந்திரன் தேவர்களோடு திருமாலைச் சரணமடைந்து, அப்பிரான் அபயமளித்துக்கட்டளையிட்டபடி, அசுரர்களையுந் துணைக்கொண்டு, மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுகியென்னும் மகாநாகத்தைக் கடைகயிறாகப் பூட்டிப் பாற்கடலைக்கடையலாயினர் என்பதாம்.

துருவனது வரலாறு:- சுவாயம்புவமனுவின் மகனான உத்தான பாத மகாராஜனுக்குச் சுநீதி யென்னும் மனைவியினிடத்துப் பிறந்த துருவனென்பவன், ஒருநாள் சிங்காதனத்தில் வீற்றிருந்த தன்தகப்பனுடைய மடியிலே யுட்கார்ந்திருந்த தனது மாற்றுத்தாயான சுருதியின் மகனாகிய உத்தமனென்பவனைப் பார்த்துத் தானும் அப்படி உட்காரவேண்டு மென்று அருகிற்போக, அதுகண்ட சுருசி, செருக்குக்கொண்டு "என்வயிற்றிலே பிறவாமல் வேறொருத்தி வயிற்றிற் பிறந்த நீ இச்சிங்காசனத்திலே யிருக்க