நினைக்கின்றது அவிவேகம்; நீ அதற்குத் தகுந்தவ னல்லன்; என்மகனே அதற்குயோக்கியமானவன்' என்று இவனை இழித்துச்சொல்ல, அதுபொறாமல் துருவன் சரேலென்று தனது தாயார் வீட்டுக்குப் போய் அவளுடைய அநுமதியைப் பெற்றுக்கொண்டு, அப்பட்டணத்திற்குச் சமீபத்திலே யிருப்பதொரு உபவனத்திலே யிருந்த ஸப்தரிஷிகளைக்கண்டு தண்டனிட்டு அவர்களால் வாசுதேவ விஷயமான ஸ்ரீதுவாதசாக்ஷர மகாமந்திரம் உபதேசிக்கப்பெற்று, மதுவனத்துக்குப்போய் ஸ்ரீவிஷ்ணுவைத் தன் இருதயகமலத்திலே இடைவிடாது தியானித்துக்கொண்டிருக்க, எம்பெருமான் அவனது தியானத்திற்குத் திருவுள்ளமுகந்து பிரதியக்ஷமாய்க் கிருபைசெய்து வரமளிக்க,அவனுடைய அநுக்கிரகத்தினாலே மூன்றுலோகங்களுக்கும்மேற்பட்டதும், சகலதாரா கிரகநக்ஷத்திரங்களுக்கும் ஆதாரபூதமும், அவர்களுடைய ஸ்தானங்களுக்கெல்லாம் அதியுன்னதமுமான திவ்வியஸ்தானத்தை யடைந்து, தனதுதாயான சுநீதியும் நக்ஷத்திரரூபமாய்த் தனது அருகிலே பிரகாசித்துக் கொண்டிருக்க, கல்பாந்த பரியந்தம் சுகமாக இருக்கின்றன னென்பதாம். மத்ஸ்யாவதார வரலாறு:- முன் ஒரு கல்பத்தின் அந்தத்திற் பிரமதேவன் துயிலுகையில் அவன்முகங்களினின்று வெளிப்பட்டுப் புருஷரூபத்துடன் உலாவிக்கொண்டிருந்த நான்குவேதங்களையும் மகாபலசாலியும் நெடுங்காலந் தவஞ்செய்து பெருவரங்கள் பெற்றவனுமான சோமுகனென்னும் அசுரன் கவர்ந்துகொண்டு பிரளயவெள்ளத்தினுள் மறைந்துசெல்ல, அதனையுணர்ந்து திருமால் ஒருபெருமீனாகத் திருவவதரித்து அப்பெருங்கடலினுட்புக்கு அவ்வசுரனைத் தேடிப் பிடித்துக் கொன்று, அவன்கவர்ந்து சென்ற வேதங்களை மீட்டுக் கொணர்ந்து அவற்றைப் பிரமனுக்குக் கொடுத்தருளின னென்பதாம். இவ்வசுரன்பெயர் சோமகனென்றலும், இவ்வரலாற்றை வேறுவகையாக விரித்துக்கூறுதலு முண்டு. கூர்மாவதார கதை:- கடல் கடைந்தகாலத்தில் அப்பொழுது, மத்தாகிய மந்தரகிரி கடலினுள்ளே அழுந்திவிட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமைவடிவ மெடுத்து அம்மலையின் கீழேசென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்தி விடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தன னென்பதாம். வராகாவதார கதை:- இரணியனது உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரராஜன் தன்வலிமையாற் பூமியைப் பாயாகச்சுருட்டி யெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது, தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மகாவராகரூபமாகத் திருவவதரித்துக் கடலினுட் புக்கு அவ்வசுரனை நாடிக் கண்டு பொருது கொன்று பாதாளலோகத்தைச் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற்குத்தி அங்குநின்று எடுத்துக்கொண்டு வந்து பழையபடி விரித்தருளின னென்பதாம்.நரசிங்காவதார கதை:- தனித்தனி தேவர் மனிதர் விலங்கு முதலிய பிராணிகளாலும் ஆயுதங்களாலும் பகலிலும் இரவிலும் பூமியிலும் வானத் |