பக்கம் எண் :

912புராணகதைகள்

இராமபிரான் வனஞ்சென்ற வரலாறு: - சீதாகல்யாணத்தின்பிறகு தச ரதசக்கரவர்த்தி இராமபிரானுக்குப் பட்டாபிஷேகஞ்செய்ய யத்தனிக்கையில் மந்தரைசூழ்ச்சியால் மனங்கலக்கப்பட்ட கைகேயி, தன்கொழுநரான தசரதரை நோக்கி, முன்பு அவர் தனக்குக்கொடுத்திருந்த இரண்டுவரங்களுக்குப் பயனாகத் தன்மகனான பரதனுக்குப் பட்டங்கட்டவும் கௌசல்யை மகனான இராமனைப் பதினான்குவருஷம் வனவாசஞ்செலுத்தவும் வேண்டுமென்று சொல்லி நிர்ப்பந்திக்க, அதுகேட்டு வருந்திய தசரதர் சத்தியவாதி யாதலால், முன்பு அவட்கு வரங்கொடுத்திருந்த சொல்லைத் தவறமாட்டாமலும் இராமன்பக்கல் தமக்குஉள்ள மிக்கஅன்பினால் அவ்வரத்தை நிறைவேற்றுமாறு அவனை வனத்திற்குச் செல்லச்சொல்லவும் மாட்டாமலும் கலங்கி வாய்திறவாதிருக்கிற சமயத்தில், கைகேயி இராமனை வரவழைத்து "பிள்ளாய்! உங்கள்தந்தை பரதனுக்கு நாடுகொடுத்துப் பதினான்குவருஷம் உன்னைக் காடேறப்போகச் சொல்லுகிறார்' என்றுசொல்ல, அச்சொல்லைத் தலைமேற்கொண்டு, அந்த மாற்றாந்தாயின் வார்த்தையையும், அவட்குத் தனதுதந்தை கொடுத்திருந்த வரங்களையும் தவறாது நிறைவேற்றி மாத்ரு பித்ருவாக்ய பரிபாலனஞ்செய்தலினிமித்தம் இராமபிரான் தன்னைவிட்டுப் பிரியமாட்டாதுதொடர்ந்த சீதையோடும் இலக்குமணனோடும் அயோத்தி யைவிட்டுப் புறப்பட்டு வனவாசஞ்சென்றன னென்பதாம்.

காகன் நயனங்கொண்ட கதை: - வனவாசகாலத்தில் சித்திரகூடமலைச் சாரலிலே இராமபிரானும் ஜாநகிப்பிராட்டியும் ஏகாந்தமாக இருக்கிற சமயத்தில், இந்திரன்மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக்கண்டு மோகித்து அவளைத் தான் ஸ்பர்சிக்க வேண்டுமென்னுந் தீயகருத்தினனாய்த் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டுகொண்டுவந்து, பிராட்டியின் மடியிலே பெருமாள் பள்ளிகொண்டருளுகையில் தாயென்றறியாதே பிராட்டியின் திருமார்பினிற்குத்த, அவ்வளவிலே பெருமாள் உணர்ந்தருளி அதிகோபங்கொண்டு ஒருதர்ப்பைப்புல்லை யெடுத்து அதிற் பிரமாஸ்திரத்தைப் பிரயோகித்து அதனை அந்தக்காகத்தின்மேல் மந்தகதியாகச்செலுத்த, அக்காகம் அந்த அஸ்திரத்துக்குத் தப்பி வழிதேடிப் பலவிடங்களிலும் ஓடிச்சென்று சேர்ந்தவிடத்தும் ஒருவரும் ஏற்றுக்கொள்ளாமையாலே மீண்டும் இராமனையே சரணமடைய, அப்பெருமான் அருள்கொண்டு, அக்காகத்துக்கு உயிரைக்கொடுத்து அந்த அஸ்திரம் வீண்படாமல் காகத்தின் ஒரு கண்ணை அறுத்தவளவோடு விடும்படி செய்தருளின னென்பதாம்.

இராவணன் மாரீசனைக்கொண்டு மாயஞ்செய்து சீதையைக்கவர்ந்த வரலாறு:- தாடகையின் மகனும், சுபாகுவின் உடன்பிறந்தவனும், இராவணனுக்கு மாமன்முறை பூண்டவனும், இராமபிரானிடத்துப் பழம்பகைமை யுடையவனும், மாயையில் மிகவல்லவனுமான மாரீசனென்ற ராக்ஷசன், சீதையைக் கவர்ந்து செல்லக்கருதி இராவணனது தூண்டுதலின்படி மாயையினாற் பொன்மானுருவங்கொண்டு தண்டகாரணியத்திற் பஞ்சவடியிலே சீதையினெதிரிற் சென்று உலாவுகையில், அவள் அதனைநோக்கி