பக்கம் எண் :

புராணகதைகள்919

லும்படி கம்சனால் ஏவப்பட்ட அசுரர்களில் அரிஷ்டனென்பவன் எருதுவடி வங்கொண்டு பசுக்களையெல்லாம் முட்டி இடைச்சேரியைப் பயன்படுத்திக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணனது திருவயிற்றின்மேற் கண்வைத்துக் கொம்பு களைநீட்டிப் பாய்ந்துவர, கண்ணபிரான் அவனைக் கொம்புகளிற் பிடித்து அசையவொட்டாமற்செய்து தன்காலினால் அவன்வயிற்றில் ஓரிடியிடித்து அவன்கழுத்தைப் பிடித்துக் கசக்கி அவனுடையகொம்புகளில் ஒன்றைப் பறித்து அதனாலேயே அவனை அடித்துக் கொன்றன னெனினுமாம்.

மருதிடைத்தவழ்ந்த கதை:- கண்ணன் குழந்தையாயிருக்குங் காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல திருவிளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த நத்தகோபன்மனைவியான யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற்கட்டி ஓருரலிலே பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலையிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவிலே யெழுந்தருளியபொழுது, அவ்வுரல் குறுக்காய்நின்று இழுக்கப் பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்துவிழுந்தவளவிலே, முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன் மணிக்கிரீவன் என்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்தீர்ந்து சென்றனர் என்பதாம். அந்தக் குபேரபுத்திரர்கள் முன்பு ஒருகாலத்தில் பலதெய்வமகளிருடனே ஆடையில்லாமல் ஜலக்கிரீடை செய்துகொண்டிருக்கையில், நாரதமகா முனிவர் அங்கு எழுந்தருள, மங்கையரனைவரும் நாணங்கொண்டு ஆடையெடுத்து உடுத்து நீங்க, இந்த மைந்தர் மாத்திரம் மதுபாநமயக்கத்தால் வஸ்திரமில்லாமலே யிருக்க, நாரதர் கண்டு கோபங்கொண்டு 'மரங்கள் போலிருக்கிற நீங்கள் மரங்களாவீர்' என்று சபித்து, உடனே அவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இரங்கி, 'நெடுங்காலஞ் சென்றபின்பு திருமால் உங்களையடையுஞ்சமயத்தில் இவ்வடிவமொழிந்து முன்னையவடிவம்பெற்று மீள்வீர்' என்று சாபவிடை கூறிப் போயினர் என அறிக.

கன்றால் விளவெறிந்த கதை:- கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கபித்தாசுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ்வரும்பொழுது மேல்விழுந்துகொல்வதாக எண்ணி வந்துநிற்க, அதனையறிந்து, கிருஷ்ண பகவான் அவ்வாறே தன்னைமுட்டிக்கொல்லும்பொருட்டுக் கன்றின்வடி வங்கொண்டுவந்த வத்ஸாசுரனைப் பின்னிரண்டுகால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் ஏறிய இருவரும் சிதைந்து தமதுஅசுரவடி வத்துடனே விழுந்து இறந்தன ரென்பதாம்.

பகாசுரனைக் கொன்ற வரலாறு:- பகனென்னும் அசுரன் கொக்கு வடிவங்கொண்டு கண்ணபிரானைக்கொல்வதாக நெருங்கிவர, அப்பொழுது கண்ணன் அப்பறவையின் வாயலகுகளை இருகையாலும் பிடித்துக் கிழித்து அதனை யழித்தன னென்பதாம்.

பரிவாய் பிளந்த கதை:- கம்சனா லேவப்பட்ட அசுரர்களிற் கேசி யென்பவன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சிநடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணபிரான்மேற் பாய்ந்துவர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன்வாயிற் கொடுத்துத் தாக்கிப்