பக்கம் எண் :


230திருத்தொண்டர் புராணம்

 

அம்பரம் - ஆகாயம். வெங்கதிர் - ஞாயிற்றின் கதிர். "நிறைவெண் கொடிமாடம்" என்பது இத்தலத் தேவாரம். "வெண்கொடி" (243) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. கொடிகள் - மாடங்களின் உயர்ந்த ஆடரங்குகளில் ஆடும் பெண் கொடிகளையும் குறிப்பாலுணர்த்துவதாம். "மாடந்தோறுங் கோதைசூ ழளக பாரக் குழைக்கொடி யாட மீது சோதிவெண் கொடிகளாடும்" (474) என்றது இங்கு நினைவு கூர்தற்பாலதாம். பெண்கள் ஆடுதல் ஆண்டவன் விழவின்பொருட்டும், அடியார் வருதலாகிய சிறப்பின் பொருட்டுமாம்.

குலவும் - விளங்கும்; விளங்கச் செய்யும் என்றலுமாம். "குலாத்தில்லை", "குலாப்பத்து" , "குலாவு பாதம் விளக்கியே" (443) பார்க்க.

ஞாலம் திகழ் - உலகத்தை விளங்க வைக்கும். ஈடேற்றும் என்க.

முனிவர்கள் - தில்லை மூவாயிரவரும், பதஞ்சலி, வியாக்கிரபாதர், சைமினி, வியாசர், சுகர், சூதர் முதலியோரும்.

ஓலம் பெருகிய - ஓலம் - ஒலி. ஓலம் - அபயம் - என்று கொண்டு கூவியடையும் குரல் என்றலுமாம்.

நிலை ஏழ் கோபுரம் - ஏழ்நிலைக் கோபுரம். இது மேற்குவாயிற் கோபுரம்.

மெய் உற என்க. உறுதல் - நிலம் பொருந்துதல். கொடு - பணிந்துகொண்டு.

உள் - திருக் கோயிலுக்குள்ளே.

முறையே தொழுது - என்பதும் பாடம்.

164

1430.

வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
         வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய வார்வத் திடையெழு
         மன்பின் கடனிறை யுடலெங்கும்
புகளச் செறிநிரை விரவத் திருமலி
         பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிட முடையார் நடநவில்
         கனகப் பொதுவெதிர் கண்ணுற்றார்.

165

(இ-ள்.) வளர்...வலம் - வந்து - அழகு வளர்கின்ற மேகங்கள் சூழ்கின்ற திருமாளிகையை வலமாக வந்து; அலமரும்வரை நில்லா...விரவ - வருத்தம் தருகின்றதும் வரையறையின்படி நில்லாத அளவிற் பெருகியதுமாகிய ஆர்வத்தினிடை எழுகின்ற அன்பாகிய கடல்நிறைந்த திருமேனி முழுதும் மயிர்ப்புளகம் மிகுந்து ஒழுங்குபடக கலக்க; திருமலி...புகுவார் - திருமிகுந்த பொன்பூண்ட கோபுரத்தினுள்புகும் நாயனார்; முன்....கண்ணுற்றார் - முன்பு, கழுத்தில் விளங்குகின்ற விடத்தினை யுடையவராகிய அருட்கூத்தப் பெருமான் நடமாடுகின்ற பொன்னம்பலத்தை எதிா கண்ணுற்றனர்.

(வி-ரை.) பொன்வளர் திருமாளிகை - என்று கூட்டுக. திருமாளிகை என்பது திருமாளிகைப்பத்தி எனத் தில்லையில் திருமதிலை அடுத்துக் கோயிலினுள் உள்ள அமைப்பு. பொன்வளரர் - அநபாயச் சோழராசராலும், அவரது முந்தையோராலும் பொன் வேய்ந்து அணிசெய்யப்பட்ட என்ற குறிப்புமாம். "தில்லைத் திருவெல்லை, பொன்னின் மயமாக் கியவளவர் போரேறு" (சண்டீசர் - புரா - 8) பார்க்க. 1திருமாளிகை - திருக்கோயில் என்றலுமாம்.

 1,

எனது சேக்கிழார் (நான்காம் பதிப்பு) 21 பக்கம் பார்க்க.