பக்கம் எண் :


282திருத்தொண்டர் புராணம்

 

முறையே இறைவனது வலக்கண்ணும் இடக்கணணுமாவன. தன்கண் கோப்பதும் - தமது கண்களை இடந்தும் இடத்தலுற்றும் முயன்றவுடனே; பற்றி - "ஏறுயர்த் தவர்தங் கையாற் பிடித்துக்கொண்டு" (829). கொண்டார் - தம் வலத்தில் நிற்கவைத்துக் கொண்டனர். - (8) மாவலி சரிதம். மாவலி முன் பிறப்பில் எலியாயிருந்த காலம் கோயில் விளக்கில் நெய்யுண்ணப் புக்கபோது சுடர் மூக்கினைச் சுடவே, நுந்துதலினால் திரிமூண்டெரிய அப்புண்ணியத்தால் மாவலிச் சக்கரவர்த்தியாய்ப் பிறந்து உலகாண்டனன் என்பது வரலாறு. மண்ணும் - விண்ணும் - வானுலகம் - மூவுலகாட்சி. இதனால் விட்டுணு மாவலிபால் மூவடிமண் இரந்த சரிதமும் கேட்கப்படும். - (9) கணம்புல்ல நாயனார் சரிதக் குறிப்பு. அருந்தவத்த - தவத்தினையுடைய. புராணம் பார்க்க. - (10) இராவணன் சரிதம். பதிகமுழுதும் அவ்வவர்க்கருளும் சிவனது சரிதங்கள் பற்றிய கருணைத்திறங்களே போற்றப்பட்டன.

II திருச்சிற்றம்பலம்

திருநேரிசை

ஆத்தமா மயனு மாலு மன்றிமற் றொழிந்த தேவர்
சோத்தமெம் பெருமா னென்று தொழுதுதோத் திரங்கள் சொல்லத்
தீர்த்தமா மட்ட மீழன் சீருடை யேழு நாளுங்
கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

2

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- சிவனருள் செய்யும் திறம்.

பதிகப்பாட்டுக் குறிப்பு - இத்திருப்பதிகத்துள் இரண்டு பாட்டுக்களே கிடைத்துள்ளன. - (1) பிலயம் - பிரளயம் என்பது பிலயம் என நின்றது; ஊழி. கொள்ள - கொள்ளுமளவும். அடி - முடி - நிரனிறை. தூய மந்திரங்கள் - சிவமந்திரம். பாசு பதப்படையினை ஏவுங் காலத்துச் சொல்லலாவது. - (2) சோத்தம் - இழிந்தோர் செய்யும் அஞ்சலி. தீர்த்தமாம் அட்டமி - தீர்த்த விழா அட்டமிநாளில் வரும்படி முன் ஏழுநாள் பிரதமைதிதி தொடங்கி விழாச்செய்தல். கூத்தராய் வீதிபோந்தார் - திருவீதியில் எழுந்தருளினார். விழாச் சிறப்புக்கூறிய இடம் இப்பதிகம்.

தலவிசேடம் :- திருக்குறுக்கை - காவிரிக்கு வடகரையில் 26-வது தலம். சுவாமி - வீரட்டேசுவரர்; அம்மை - ஞானாம்பிகை. இது நீடுர் புகைவண்டி நிலையத்தினின்றும் வடமேற்கே மட்சாலையில் மூன்று நாழிகையளவில் அடையத்தக்கது. அன்னியூரின் (22-வது தலம்) வடமேற்கே மட்சாலையில் மூன்று நாழிகையளவில் ஐயாவையன் வாய்க்காலுக்கு மேல் பக்கமாய் 1/2 நாழிகையளவில் உள்ளது.

நின்றியூர்

திருச்சிற்றம்பலம்

திருக்குறுந்தொகை

கொடுங்கண் வெண்டலை கொண்டு குறைவிலைப்
படுங்க ணொன்றில ராய்ப்பலி தேர்ந்துண்பர்
நெடுங்கண் மங்கைய ராட்டயர் நின்றியூர்க்
கடுங்கைக் கூற்றுதைத் திட்ட கருத்தரே.

1

திருச்சிற்றம்பலம்

பதிகக்குறிப்பு :- நின்றியூர் இறைவர் கூற்றுதைத்த கருத்தர்; அவர் கள்வர்; உரிபோர்த்த பரமர்; பெருஞ்செல்வர்; பிறைசூடிய கூத்தர்; அவரைப் பற்றினாரை வினையும் பாவமும் பற்றா; தொழுவார் வினை ஓடும்; அஞ்சியாகிலும் அன்பு பட்டாகிலும் அவரை நெஞ்சே நினை.