பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்449

 

1531.

தொல்லை வேதந் திருக்காப்புத் செய்த வாயிற் றொடர்வகற்ற
வல்ல வன்ப ரணையாமை மருங்கோர் வாயில் வழியெய்தி
யல்ல றீர்ப்பார் தமையருச்சிப் பார்க டொழுவா ராம்படிகண்
டெல்லை யில்லாப் பெரும்புகழா ரிதனை யங்குக் கேட்டறிந்தார்.

266

1530. (இ-ள்.) பரவை...பதியில் - கடற்கரையின்! நீர் கொண்ட கடற் கழிக்கானலின் பக்கத்தில் நெருங்கியுள்ள அந்தத்தலத்தில்; அரவச்சடை அந்தணனாரை - அரவம் மேல் ஆடுகின்ற சடையினையுடைய அந்தணராகிய இறைவரை; அகில மறைகள் அர்ச்சனை செய்து - வேதங்களெல்லாம் அருச்சித்து; உரவக்கதவம் - வலிய கதவத்தை; திருக்காப்புச் செய்த...நிற்கின்ற - அவ்வாறு திருக்காப்பிட்ட அந்த நாள் முதலாக இந்நாள்வரையிலும் திறக்கப்படாமல் அடைத்த படியே நிற்கின்ற; மணிநீள்வாயில் வணங்குவார் - அழகிய நீண்ட திருவாயிலினை வணங்குவார்களாகிய,

265

1531. (இ-ள்.) தொல்லைவேதம்....அணையாமை - பழமையாகிய வேதங்கள் திருக்காப்பிட்ட திருவாயிலின் பூட்டிய தொடர்ச்சியினை நீக்கவல்ல அன்பர்கள் வாராமையால்; மருங்கு ஒர்வாயில் வழி எய்தி -அதன்பக்கத்தில் உள்ள ஒரு வாயிலின் வழியேசென்று; அல்லல் தீர்ப்பார்தமை அருச்சிப்பார் தொழுவாராம் பார்களாயும் தொழுவார்களாயும் இருக்கும் முறைமையினைக் கண்டு; எல்லை இல்லாப் பெரும் புகழார் - அளவுட்படாத பெரிய புகழினை உடைய ஆளுடைய பிள்ளையாரும் அரசுகளும்; இதனை...அறிந்தார் - மேற்சொன்ன இச்செய்தியை அங்குள்ளவர்கள் சொல்லக்கேட்டு அறிந்தார்கள்.

266

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருபொருள் கொண்டன.

1530. (வி-ரை.) பரவை ஒதம் கழிக்கானல் - கடல் நீரானது கழியின் வழிச் சார்ந்த சோலை. கானல் - மணற் பரப்பும் அங்குள்ள தாவரமும்.

பாங்கு நெருங்கும் - பக்கத்தில் அணித்தாக உள்ள. இவ்வாறு கூறியது கழியின் பக்கத்தில் உள்ள பதியாயினும் முன்பாட்டிற் கூறியவாறு புன்னைமணங் கமழ்வது என்று குறிப்பித்தபடி. முன்னர்ப் புன்னைமணங் கூறிப் பின்னர்க் கழியினைக் குறிப்பது சேர்வோர்க்கு மனவெழுச்சி சேறற் பொருட்டும், நகரை நோக்கிவருவார் புற நகரின் கண் உள்ள உப்பள முதலியவைகளினியல்புகள் கண்டு பின்னர் நகரைச் சேரக்கடவர் என்று காட்டற் பொருட்டுமாம்.

அந்தணனாரை - மறைகள் அர்ச்சனை செய்து - அந்தணராதலின் மறைகள் அர்ச்சித்தன என்பது குறிப்பு. மறைகள் அர்ச்சனை செய்தலாவது வேத மந்திர அதி தெய்வங்கள் உருக்கொண்டு வந்து சிவக்குறியிற் பூசித்தல். அருச்சனைசெய்து - திருக்காப்புச் செய்த என்று கூட்டுக.

கதவம் திருக்காப்புச் செய்தலாவது - பூசைக்காகச் சந்நிதி வாயில்களைத் திறந்து பூசித்த பின்பு. மறுபூசை செய்யும் வரை உரிய பாவனை - கிரியை - மந்திரங்களுடன் கதவங்களை அடைத்துத் தாழிட்டுவைத்தல். விடையிலச்சினையிட்ட திருவிளையாடல் முதலியவை காண்க.

அந்நாள் முதல் இந்நாள்வரை அடைத்தே - மறைகள் ஒருகாலம் சிவக்குறி கண்டு பூசித்துப் போயின; அந்நாள் முதல் நாயன்மார் வந்த இந்நாள் வரையும் அடைத்தபடியே. ஏகாரம் தோற்றம்.


மருங்கோர்வாயில்