பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்555

 

பதிகங்களும் இவ்வொரு மகுடமே கொண்டன. இவ்வாறு ஒரே மகுடம் பூண்ட இரண்டு பதிகங்கள் கொண்டது, காஞ்சிபுரத்திற்குத் தனிச் சிறப்பு. கயிலைத் திருத்தாண்டகப் பதிகங்கள் மூன்றும் "கயிலை மலையானே போற்றி போற்றி" என்ற மகுடந் தாங்கி நிற்பது அத்திருமலையின் தனிச் சிறப்புணர்த்துதலும் இங்கு உடன் நினைவு கூர்தற்பாலது. கூற்றுவன் - கூற்றுவனைக் குமைத்தகோன், கனபவளச் செம்மேனி கலந்த வெள்ளை நீற்றவன், பல்லுயிர்களாகியெங்கும் பரந்தவன், தோற்ற நிலை யிறுதிப் பொருளாய் வந்த மருந்தவன், துணையிலி, மலைமங்கை பங்கா என்பார் வாயவன், சொற்பதமுங் கடந்து நின்ற எம்மான் என்றிவை முதலியவற்றால் அறியப்படுகின்ற கச்சி ஏகம்பன் என் எண்ணத்தான்.

பதிகப் பாட்டுக் குறிப்பு :- (1) கூற்றுவன் - மறைகளைச் சொன்னவன். இறுதி பயப்பவன். கூற்றுவனை - காலனை. குமைத்தல் - அழித்தல். கனபவள...நீற்றவன் - இதனை "நலம்பெருகுந் திருநீற்றின் ஆகந்தோ யணியான்" (1593) என்று பொருள் விரித்தருளினார் ஆசிரியர். நிலா ஊரும் - ஊர்தல் அசைதல். - (2) தோற்றம் நிலை இறுதிப் பொருளாய் வந்த மருந்து - படைக்கப்பட்டும், நிலை பெறுத்தப்பட்டும், அழிக்கப்பட்டும் வரும் பொருளாகிய உடல் - கரணம் - உலக முதலியவை மாயையால் ஆக்கப்படுவன; மாயை இறைவனது பரிக்கிரக சத்தி யாதலானும் உயிர்களைக் கட்டிய பாசம் போக்க உதவுவ தாதலானும் மருந்தவன் - என்றார். மருந்தவன் - மருந்தையுடையவன். "மருளுலா மலங்க டீர்க்கு மருந்திவை வைத்திய நாதன்" (சித்தி - 233). படைத்தல் முதலிய முத்தொழிலும் மலங்களைத் துடைத்தலின் மருத்து என்றார் என்றலுமாம். பொறை தீர்ப்பான் - தாங்குபவன். அழிப்பவன் என்றலுமாம். (3) துணையிலி - தாயுமிலி தந்தையிலி தான்றனியன்" (திருவா). உவமன் இல்லாதவன் - ஒப்பற்றவன் - என்றலுமாம். துணை - ஒப்பு. - (4) வாயவன் - வாக்கில் விளங்குபவன் வாய் - ஏழனுருபாகக் கொண்டு பங்கா என்பாரிடத்தில் விளங்குபவன் என்றலுமாம். - (8) வேல் - ஆயுதப் பொது. வெல்லது வேல். உரும் - இடி. முழங்கி உருனெத்தோன்று மழை - மழையின் அடையாளங்கள். மின்னி இடித்தவன் - மின்னும் இடியும் ஒரிடத்தில் ஒரு காலத்தில் விளைவனவாயினும், ஒளி, வேகத்தால் முன்னும், இடியாகிய ஒலி, வேகக்குறைவினால் பின்னும் புலனாவன; ஆதலின் மின்னி இடித்தவன் என்ற அம்முறை வைத்தோதினார். இவை வானநூல் பௌதிகநூல் நுட்பங்கள். - (9) வஞ்சகன் - நிறைந்திருந்தும் வெளிப்படாது மறைந்து இருத்தல் வஞ்சகமெனப்பட்டது. மருந்து - பிறவி நோய் தீர்த்தலால் மருந்தென்றார். உருவகம். நினைவார்க்கு என்றும் வான் பிணிகள் தீரும் வண்ணம் மருந்து என்க. "மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்" (தேவா) படர் சடை எட்டு - எட்டுத் திசையும் படரும் சடை. அவரது சடை ஒன்பதென்ப. "ஒன்பது போலவர் திசையும் படரும் சடை. அவரது சடை ஒன்பதென்ப. "ஒன்பது போலவர் கோலக் குழற்சடை" (தேவா). - (10) வெம் மான உழுவை - வெ்விய - கொடிய - பெரிய - புலி. மானம் - பெரிது. உழுவை - புலி.

திருச்சிற்றம்பலம்

திருத்தாண்டகம்

உரித்தவன்கா ணுரக்களிற்றை யுமையா ளொல்க
         வோங்காரத் தொருவன்கா ணுணர்மெய்ஞ் ஞானம்
விரித்தவன்காண் விரித்தநால் வேதத் தான்காண
         வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குச்
         திரண்டவன்காண் டிரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன்கா ணெழிலாரும் பொழிலார் கச்சி
         யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே.

1