பெருந்தவத்தெம் பிஞ்ஞகன்காண் பிறைசூ டிகாண் பேதையேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும் மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண் வானவர்கள் தாம்வணங்கு மாதே வன்காண் அருந்தவத்தா ளாயிழையா ளுமையாள் பாக மமர்ந்தவன்கா ணமரர்கடா மர்ச்சித் தேத்த விருந்தவன்கா ணெழிலாரும் பொழிலார் கச்சி யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே. 5 முந்தைகாண் மூவரினு முதலா னான்காண் மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத் தந்தைகாண் டண்கடமா முகத்தி னாற்குத் தாதைகாண் டாழ்ந்தடியே வணங்கு வார்க்குச் சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறு மெந்தைகா ணெழிலாரும் பொழிலார் கச்சி யேகம்பன் காணவனென் னெண்ணத் தானே. |