வாவி மீது தோன்றி வந்து - எழுந்தனர் - கயிலைச்சாரற் பொயய்கையினுள் கீழ்நோக்கி முழுகிய நாயனார், ஐயாற்றுவாவியில் மேல்நோக்கி எழுந்தனர் என்பார் மீது என்றும், அவ்வாறு எழும்போது அவர்தந் திருமேனி தலை முதல் சிறிது சிறிதாக வெளிவருதல் கருதித் தோன்றி என்றும், திருமேனி முற்றிலும் வெளிப்பட வந்ததனைக் கருதி வந்து என்றும், இவ்வாறு படிப்படியாக நீர்க் கீழிருந்து மேல் வந்தனராதலின் எழுந்தனர் என்றும் கூறினார். உலகெலாம் வியப்ப - எழுந்தனர் - என்று கூட்டுக. எழுந்தது கண்ட பின்னரே உலகம் வியப்படையுமாதலின் அம்முறையே உலகெலாம் வியப்ப என்ற தனைப் பின்வைத்துக் கூறின தகுதி காண்க. "உலகெலாம்" என்ற இப்புராண முதன் மங்கல மொழிபுணர்த்தி ஓதினமை இஃதோர் அரும்பெருஞ் செயலாகிய திருவருள் வெளிப்பாடு என்று அறிவுறுத்தற் பொருட்டாம் யாரறிவார்? என்று முன்பே வினாவிக் கூறிமுடித்த கருத்துமிது. அறிவார் ஒருவருமிலர் என்று, வினா இன்மை குறித்து நின்றது. யாரறிந்தார் - பனிமலர் - மணிவரைப் - என்பனவும் பாடங்கள். 371 1637. | வம்பு லாமலர் வாவியின் கரையில்வந் தேறி உம்பர் நாயகர் திருவருட் பெருமையை யுணர்வார் தம்பி ரான்றருங் கருணைகொ லிது?வென விருகண் பம்பு தாரைநீர் வாவியிற் படிந்தெழும் படியார், |
372 1638. | மிடையு நீள்கொடி வீதிகள் விளங்கிய வையா றுடைய நாயகர் சேவடி பணியவந் துறுவார், அடைய வப்பதி நிற்பவுஞ் சரிப்பவு மான புடைய மர்ந்ததந் துணையொடும் பொலிவன கண்டார்; |
373 1639. | பொன்ம லைக்கொடி யுடனமர் வெள்ளியம் பொருப்பின் றன்மை யாம்படி சத்தியுஞ் சிவமுமாஞ் சரிதைப் பன்மை யோனிக ளியாவையும் பயில்வன பணிந்தே மன்னு மாதவர் தம்பிரான் கோயின்முன் வந்தார். |
374 1637. (இ-ள்.) வம்புலாமலர்...ஏறி - மணம் வீசுகின்ற மலர்கள் பொருந்திய வாவியின் கரையில் வந்து மேல் ஏறி; உம்பர்...உணர்வார் - வேததேவருடைய திருவருளின் பெருமையை அனுபூதியில் உண்ர்பவராகி; "தம்பிரான்...இது" என - "எமது பெருமான் தருகின்ற பெருங் கருணையோ? இது" என்று துணிந்து; இருகண்...படியார் - இரண்டு கண்களினின்றும ததும்பிப் பொங்கித் தாரையாக வழிகின்ற கண்ணீரின் வாவியில் மூழ்கி எழும் தன்மையுடையவர் போன்றாராகி; 372 1638. (இ-ள்.) மிடையும்...உறுவார் - நெருங்கிய நீண்ட கொடிகள் கட்டிய வீதிகளால் விளங்குகின்ற திருவையாற்றில் எழுந்தருளிய இறைவரது திருவடிகளை வணங்கும்படி வருவாராகிய நாயனார்; அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன ஆடைய - அத்தலத்தில் நிற்பனவும் சரிப்பனவுமாகிய சரம் அசரங்கள் எல்லாம்; புடை அமர்ந்த...கண்டார் - அருகில் விரும்பிய தத்தம் பெண்ணோடும் கூடி விளங்கும் தோற்றத்தைக் கண்டனராகி; 373 1639. (இ-ள்.) வெள்ளியம் பொருப்பில் - அழகிய திருக்கயிலைமலையில்; பொன்மலைக் கொடியுடன் அமர் தன்மை ஆம்படி - பார்வதியம்மையாருடன் |