பக்கம் எண் :


சரித்திர ஆராய்ச்சிக் குறிப்புக்கள்773

 

(10) சூலமங்கலம்; இருந்தீவனகேசர் 1396; ஜடாவர்மன் பராக்கிரம பாண்டியன் 12 ஆ. தானவினோதநல்லூர் திருநாவுடையான் என்பவன் கரியுதிர்த்த நாயனார் ஆலயத்தில் திருநாவுடைய பிள்ளையார் உருவைத் தாபித்தது. (294/11)

அப்பர் சுவாமிகளுடைய உருவச்சிலை நாட்டின் அரசர்களின் விவாவமும், காலமும்.

                                     அரசர்

                           காலம்

                           கல்வெட்டு

ராஜராசர் I

985 - 1013

1

ராஜேந்திரர்

1013 - 1045

1

ராஜராஜர் II

1146 - 1178

1

குலோத்துங்கர் III

1178 - 1216

2

ராஜேந்திரன் III

1245 - 1267

1

ஜடாவீரபாண்டியன்

1253 -

1

மாற - வீரபாண்டியன்

1262 -

1

விக்கிரமபாண்டியன்

1283 -

1

ஜடாபராக்கிரமன்

1184 -

1

ஆக சோழர் 5
பாண்டியன் 4

அப்பருக்குப் பிறகு (600) இராசராசர் வரை ஆறு நூற்றாண்டுகள் கல்வெட்டு,க்கள் இல்லை. பிறகு, 1300 பிறகு, 6 நூற்றாண்டுகள் இல்லை. அதாவது விஜய நகரத்தின் நாயக்கர்கள் முகமதியர்கள் இவர்கள் காலத்தில் தாபிதம் இல்லை.

III நாயனாரது திருமடங்கள்

(1) திருச்சி - திருப்பராய்த்துறை ஆதிமூலேசுவரர். முன்மண்டபச் சுவர் கி. பி. 1007-இராசராசசோழர் l-22 ஆண்டு. ஆலயத்திற்கருகில் அமைக்கப் பெற்ற திருநாவுக்கரசுதேவன் மடத்தில் மாகேசுரர்களுக்கு அன்னமிட நிலதானம். (644 திருச்சி)

(2) தஞ்சை - திருவீழிமிழலை. வீழிநாத சுவாமி முதல்பிரகாரம் - வடசுவர் கி.பி. 1017 இராசேந்திர சோழன் 2ம ஆண்டு - திருநாவுக்கரசு மடத்துக்குச் சொந்தமான நில அட்டவணை (தஞ்சை 843)

(3) தென் ஆற்காடு - திருவதிகை வீரட்டானம். முதல் பிரகாரம் தென்சுவர் கி. பி. 1114 குலோத்துங்கன் I - 6ம் ஆண்டு - வாகீசர் மடத்துக்குத்தானம் (தெ. ஆ. 311)

(4) செங்கற்பட்டு - 1 வேளச்சேரி...கர்ப்பக்கிரகம் வடசுவர். 1200 கி. பி. குலோத்துங்கன் III - திருவான்மியூர்த் திருநாவுக்கரசு மடத்திற்குச் சேதிநாயனார் பூதானம். (செங் 1131)

(5) தஞ்சை - குறுக்கை வீரட்டானர் முன் மண்டபத்துத் தென்சுவர் கி. பி. 1207. குலோத்துங்கன் III 29 ஆண்டு - திருநாவுக்கரசு திருக்குகை கட்டுவதற்கும் அக்குகை மூலமும்...உணவளிக்க வைகாசித் திருநாளுக்குவரும் மாகேசுரர்களுக்கு உணவளிக்கவும் ஆகாயத்தில் திருத்தாண்டகம் ஓதுதற்கும் நெல் தானம் (தஞ் - 219/17).

(6) மதுரை - பூதக்குடி : அப்பர் சத்திரத்தில் ஒரு தாமிரசாசனம். இங்கு ஒரு மடம் இருந்தது குறிக்கும் (மது - 1413).1

பெரிய புராணத்தில் கண்ட மடங்கள் இருந்த திங்களூர் அப்பர் மடம், திருப்பூந்துருத்தி, புகலூர், திருநெல்லூர் மடங்கள் : இவை என்ன ஆயின?

 1.

4ல் சொன்ன வேளச்சேரிக்கு ஜீன சிந்தாமணி சதுர்வேதி மங்கலம் என்றது பழைய பெயர். ஆகவே அங்கே முன்காலத்தில் சமணர் இருந்திருக்க வேண்டும்.