பக்கம் எண் :


774திருத்தொண்டர் புராணம்

 

திருப்பூந்துருத்தியில் அப்பர் மடத்தைச் (இடிந்தது) செவ்வாய்க்கிழமை மடம் என்கிறார்கள்!

VI நாயனாரது பெயர்களை மக்கள் இட்டு வழங்கியது

(1) திருநாவுக்கரசு வேன் : 1025 கி. பி. ராஜேந்திரன் 12 ஆண்டு திருச்சி காமரச வல்லி கார்க்கோடக ஈசர் ஆலயம் - குன்றக்கிழான் திருநாவுக்கரசு தேவன் - சம்பந்தர் மடத்திற்குப் பூதானம் (திரு - 854).

(2) வாகீசுர பண்டிதர் : கி. பி. 1181 இராஜராஜதேவன் II-9 ஆண்டு திருவொற்றியூர் ஆதிபுரீசர் ஆளுடைய நம்பிகள் புராணம் வாசிக்க வாகீசுர பண்டிதர் கேட்டது (செங். 965).

(3) திருநாவுக்கரையன் ராஜகேசரி : 15 ஆண்டு திருமயானம் ஞானபரமேசுர ஆலயம், நல்லூர் வியாபாரி நாராயணன் சோழர்கள் என்ற திருநாவுக்கரையன் (தஞ் - 128)

(4) வாகீசுரதேவ முதலியார் : 13 நூற்றாண்டு - ராஜ நாராயணன் சம்புவராயன் 12 ஆண்டு திருவொற்றியூர் கீழை மடத்து வாகீசுரதேவ முதலியார் (செங் 1076).

(5) வாகீசுரதேவர் : 13 நூ. ராஜ நாராயண சம்புவராயன் 8 ஆ. செங்கற்பட்டு புழலி திருமூலத்தான முடையார் கோயில் பெரும்பற்றப்புலியூரில் வசிக்கும் செல்வத் திருவாரூரின் கீழைமட சந்தானத்திற்குச் சேர்ந்த வாகீசுர தேவர்க்கும் புழல் கிராமத்தை குடிதானம் செய்தது (செங் - 483/1920).

(6) திருநாவுடையார் : கி. பி. 1396 ஐடாபராக்கிரம பாண்டியன் 12 ஆ. தஞ்சை சூலமங்கலம் கிருத்திராசர் ஆலயம் திருநாவுடையார் பிள்ளையார் உருவினைத் தான வினோத நல்லூர் திருநாவுடையார் தாபித்து நிலதானம் செய்தது (தஞ்சை 1240)

(7) திருநாவுக்கரசன் திருவீதி : திருவதிகை வீரட்டானேசுரர் : காடழித்து ஊருண்டாக்கி திருநாவுக்கரசன் திருவீதி என்ற பெயரிட்டுக் குடியேற்றினது. 403121 மேற்கண்ட விவரங்களால் நாயனார் பெயர்களை மக்கள் இட்டுக் கொண்டது மாத்திரமன்றி ஒரு வீதிக்குமிடப்பட்டது. இது அப்பூதி அடிகள் சரிதத்தை நினைவூட்டுகிறது.1

V சரித்திர பாகங்கள்

அப்பரால், சைவத்திற்குத் திருத்தப்பட்ட மகேந்திரவர்மப் பல்லவன் - இவர் சரித்திர பாகத்தைக் கூறும் கல்வெட்டுக்கள் வல்லம் குகை (185/52) யிலும், திருச்சிமலைக் குகையிலும் (511 Vol. III 278) இருக்கின்றன. இவைகளே அப்பர் காலத்தை உறுதியாக்குகின்றன.

(2) திருத்தாண்டகம் ஓதுதல் - குறுக்கை வீரட்டானம் 1207 ஆண்டு கல்வெட்டுத் திருக்குகை கட்டுவதற்குத் தானம் செய்து அங்கே திருத்தாண்டகம் ஓதும்படி உத்தரவிட்டது. அப்பருக்குத் தாண்டக வேந்து என்ற பெயர் உண்டன்றோ!

(3) அப்பர் உற்சவம் - கி. பி. 1271-ல் மாறவர்மன் வீரபாண்டியன் காலத்தில் திருநாவுக்கரசு திருவிழா முதற்கொண்டு 12 திருவிழாக்கள் நடத்துவதற்குத் தானம் செய்யப்பட்டது.

(4) குளிச்செழுந்த நாயனார் - திருப்புகலூர் - இப்பெயர் குளித்து எழுந்த செய்தியைக் குறிக்கிறது.

(5) ஏறவிட்ட குப்பம் - திருப்பாதிரிப்புலியூருக்கு அருகில் இப்பெயர் கொண்ட ஊர் அப்பர்கடலிற் கட்டி போகவிட்ட கல்தூணிலிருந்து தப்பி மிதந்து வந்த செய்தியைக் குறிக்கிறது.

 1.

வாகீசர் என்ற பெயர் சிவபெருமானுக்கும் ஆகமங்களில் வழங்கப்படுகிறது.