சடைமேற் பிறைசூடும் அச்சிவபெருமானுக்கே பிறப்பு ஏழினும் நாம் ஆளாவோம்; அதுவல்லால், மற்றொருவர்க்கும் எஞ்ஞான்றும் ஆளாகாமலுமிருப்போம். சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கே என்றும், அவர்க்கல்லால் என்றும் முன்னும் பின்னும்ட கூட்டி யுரைக்கும்படி நின்ற இடைநிலைத் தீபம். சிவபிரானே முழுமுதற் றனிப்பெருங்கடவுள் என்றபடி. எஞ்ஞான்றும் - பெத்த முத்தி யிரண்டிலும். எழுபிறப்பு - எழுவகைப்பட்ட பிறவிகள். ஆளாவோம் - ஆகாப்போம் - என்று உடன்பாட்டானும் எதிர்மறையானும் கூறியதும்; அவர்க்கல்லால் மற்றொருவர்க்கு என்று எதிர்மறையாற் கூறியதும் உறுதி குறித்தன. ஒருவர்க்கும் - எனும் முற்றும்மை தொக்கது. பாகா - பகா என்றது முதனீண்டது. பாகாப் போழ் - பகுதியில்லாத - குறைந்த - சந்திரன்; ஆகப்போம் - ஆகோம். "அயரா வன்பினரன்கழல் செலுமே" (போதம் - 11) என்றபடி சிவப்பேறு கை வரப்பெற்ற நிலையினின்று அம்மையார் கூறும் கூற்று. 3 | ஆளானோ மல்ல லறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ? கேளாமை - நீளாகஞ் செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட விறை. |
4 ஆட்பட்ட நாங்கள் எங்கள் துன்பத்தை அறியும்படி முறையிடினும் எங்களை ஆளாகக் கொண்ட இறைவர் கேளாத காரணம்தான் என்னையோ?; நீண்ட திருமேனி முழுதும் செம்மை நிறமேயாயினும் திருமிடறுமட்டில் கரியதாய் வேறு நிறமாயிருக்கும். (கேளாமையும் அது போன்றதேயாம்.) திருமேனி முழுதும் செந்நிறமாக, மிடறு ஒன்றுமே கரிதாயிற்று; ஆயினும் அது அருளின் வண்ணமே யாதல்போல, முழுதும் தலைவராந் தன்மையுடைய இறை, எமது முறையீட்டைக் கேளார் போன்றிருத்தலும் அருளின் வண்ணமேயாம். அருளாமை யன்று கேளாமை - கேட்டருளாமை. இவ்வாறன்றிக் கேளாமைக்கு மிடற்று மறுவே காரணம் என்றுரைப்பாருமுண்டு. இறைக்கு - என்பதும் பாடம். 4 | 1இறைவனே யெவ்வுயிருந் தோற்றுவிப்பான்; றோற்றி யிறைவனே யீண்டிறக்கஞ் செய்வா - னிறைவனே "யெந்தா!" யெனவிரங்கு மெங்கண்மேல் வெந்துயரம் வந்தா லதுமாற்று வான். |
5 சிவபெருமானே எல்லா வுயிர்களையும் பிறவியிற் சேர்த்துவான்; அவ்வாறு தோற்றுவித்த உயிர்களை இறக்கும்படி செய்பவனும் அவ்விறைவனே; எமது "தந்தையே!" என்று அவரை நோக்கி இரங்கி நிற்கும் எங்கள்மேல் வெவ்விய துயரம் வந்தால் அதனை மாற்றுபவரும் அவ்விறைவனேயாவன். இறக்கம் - இறப்பு - நீக்கம்; இரங்குதல் - துன்பத்தைச் சொல்லிப் பரிந்து நிற்றல். உயிர்கள் நித்தியமாதலில் அவற்றைத் தோற்றுவித்தலாவது இறப்பித்தலாவது இல்லை. அவற்றை உடல் முதலியவை கொடுத்துப் பிறப்பித்தலும், பிறப்பினின்றும் இறக்கச் செய்தலும்; பிறப்பித்து அறிவு விளக்குதலும், இறக்கச் செய்து மறப்பித்தலும் என்ற இவையே தோற்றுவிப்பான் என்பனவாதியாகச் சொல்லப்படுவன. எவ்வுயிரும் - பிரளயாகலர் - விஞ்ஞானாகலர் - சகலர் என்ற மூவகையா ருயிர்களையும். இறையவனே - என்பதும் பாடம். |