பொருளில் வந்தது; உருபு மயக்கம். அங்கையில் அனலை ஏற்றான் சிவன். சிவனுக்காட்படுதலே சிவமாந்தன்மை தரும் என்பது. அனற்கங்கை - அனலும் கபாலமும் என்றுரைப்பாருமுண்டு. அஃது அருள் அன்றே என்க. 8 | அருளே யுலகெலா மாள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையே னெஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு. |
9 ஈசனது அருளாகிய சிவசக்தியே தனது கூறுகளாகிய பல்வேறு சக்திகளாலே உலகுயிர்களை ஆள்விப்பது; அவ்வருளே அவ்வாறு ஆள்விப்பதும் உயிர்களின் பிறப்பறுக்கும் பொருட்டேயாம். இவ்வாறு உளதாகும் மெய்ப்பொருளின் தன்மையே அருளாலே நோக்கியறிந்து நிற்கும் விதியுடையேன் ஆயினால், எக்காலத்தும் எப்பொருளும் எனக்கு அதுவேயாகும். விதியுடையேனானால் - என்க. அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதி யுடைமையாவது, அவனருள் காட்டிக் கண்டு நிற்க, அந்நிலையின் மெய்ப்பொருளைக் காணும் பக்குவமுடைமை. "அவனருளே கண்ணாகக் காணி னல்லால்" (தேவா). விதியுடையேனானால் என்பது அதன் அருமை குறித்தது. மெய்ப்பொருள் - "ஞானத்திரளாய் நின்ற பெருமானல்ல வடிவயார்மேல், ஊனத் திரளை நீக்கு மதுவு முண்மைப் பொருள்போலும்" (அண்ணாமலை - பிள்ளையார் தேவா). அருளே - ஆள்விப்பது; அருளே - பிறப்பறுப்பது என்றது மெய்ப் பொருள்; இதனைத் தெளிதல் அருளாலே நோக்கும் விதியுடைய வழியே கைகூடம் என்பது. அருளே - ஏகாரம் இரண்டும் பிரிநிலை. ஆவது - "அவனருளா லல்லது ஒன்றையுஞ் செய்யானாகவே, அஞ்ஞான கன்மம் பிரவேசியா வாகலான்" "இறைபணி வழுவாது நிற்க" என்றபடி உளவாம் நிலையும், அதுபற்றி வரும், "அயரா அன்பின் அரன் கழல் செல்லும்" நிலையும் கைவரப் பெறுதல். ஆவது - அருளே - ஆவது என்க. எப்பொருளும் ஆவது - எப்பொருளும் கிடைக்கும் என்பாருமுண்டு. 9 | 1எனக்கினிய வெம்மானை யீசனையா னென்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன்; - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக்; கொள்வதுமே யின்புற்றேன்; உண்டே யெனக்கரிய தொன்று? |
10 ஈசனை மனத்துக்கு இனிய வைப்பு நிதியாக வைத்தேன்; அவரை எனது தலைவனாகக் கொண்டேன்; இனி எனக்கரிய பொருளுமுண்டோ?; (இல்லை). வைப்பு - சேமநிதி; பிரான் - தலைவன்; வைப்பாக வைத்தலாவது நிதியைப் பொதிந்து சேமித்து இடைவிடாது பாதுகாத்திருத்தல் போல மனத்தினுள் இடைவிடாது வைத்திருத்தல். "புறம் போகவொட்டேன்" "வைப்பு மாடென்றும்" (திருவா.) 10 | 1ஒன்றே நினைந்திருந்தே னொன்றே துணிந்தொழிந்தேன்; ஒன்றேயென் னுள்ளத்தி னுள்ளடைத்தே;- னொன்றேகாண் கங்கையான் றிங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளா மது. |
11 சிவனுக்கு ஆளாகும் அது ஒன்றே நினைந்தேன்; துணிந்தேன்; உள்ளத்தினுள் அடைந்தேன். |