ஒன்றே - ஏகாரங்கள் முன்னைய மூன்றும் பிரிநிலை; பின்னையது தேற்றம். இப்பாட்டு, பூட்டுவிற் பொருள்கோள். ஒன்றே என்ற மூன்றுக்கும் நினைதல் முதலிய மூன்று செயல்களும் கங்கையான் முதலிய மூன்றிடங்களும் வகுத்தார். நினைந்திருத்தல் - கேட்டல் சிந்தித்தலும்; துணிதல் - தெளிதலும், உள்ளடைத்தல் - நிட்டை -கூடலுமாம். ஒளி - ஒளியுடைய தீ. 11 | அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் அதுவே யினிதறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு. |
12 பிரான் ஆம் ஆறு அதுவே; ஆட்கொள்ளும் ஆறும் அதுவே; இனி அறிந்தோமானால் அவர் தகவு அதுவேயாம். பிரான் ஆம் ஆறு - தலைவராகும் திறம்; ஆட்கொள்ளும் ஆறு - உயிர்களை ஆளாகக்கொண்டு அருள்செய்யும் வழி; தகவு - தன்மை; இனி - மேலும்; அறிதல் - ஆராய்தல். பனிக்கு அணங்கு கண்ணி - கார்காலத்தில் மலர்கின்ற கொன்றை மலர்மாலை; பனி - குளிர்ச்சி பொருந்திய காலம். கார்காலம். ஆகுபெயர். அணங்குதல் - விரிதல், மலர்தல். அணங்குதல் - வருந்துதல் என்று கொண்டு, கங்கையின் குளிர்ச்சிக்கு வருந்தும் கொன்றைஎன் றுரைகொண்டனர் முன்உரைகாரர். ஒள் நுதலின் மேல் ஓர் தனிக்கண் - அழகிய நெற்றிக் கண். தகவு - தகுதி. தலைவராகும் தன்மை இவர்க்கே உரியது என்பது குறிப்பு. நெற்றித் தனிக்கண் பற்றி யுரைத்ததும் அக்கருத்து. பிரானாதலன்றியும் தம்மை உயிர்கள் வந்தடையும் அறிவு பெற்றில் ஆதலின் தாமே அருளி அவற்றை ஆளுங் கொள்கின்றார் என்பது. கண்ணி - தலைமாலை. ஈண்டுக் கொன்றைக் கண்ணி குறித்தது. "கண்ணி கார்நறுங் கொன்றை" (புறநானூறு). "புனத்தகத்த நறுங் கொன்றைப் போந்னுள்ளான்" என்றபடி மறைமூலமாகிய முதன்மையையும், நெற்றித் தனிக்கண். "நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப தென்னே?" என்றபடி ஆட்கொள்ளும் அங்கண்மைத் திறமும் குறித்தன. வலிந் தாட்கொள்ளுதல் (தலைவராதலின்) அவர் தகவு என்பதாம். ஏகாரங்கள் தேற்றம்; உம்மை இறந்தது, தழுவியது. பனிக்குத் தெய்வமாகிய சந்திரனைத் தலைமாலையாகக் கொண்டது என்பாருமுண்டு. 12 தகவுடையார் தாமுளரேற் றாகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர வூர்ந்திடுமா நாக மொருநாண் மலைமகளைச் சார்ந்திடுமே லேபாவந்தான். 13 இறைவரே! நீர் தகைவுடையாராக உள்ளவராகில் மாநாகத்தை மாலையா மார்பிற் புரளவிடுதல் பொல்லாது! மிகவும் கொலைசெய்ய வூர்ந்திடும் அது ஒருநாள் அம்மார்பிற் பங்குடைய மலைகளைச் சார்ந்திடுமாகில் பழியா மன்றே (ஆதலின் மாநரகத்தை அணியா தொழிக!). தகவுடைய நீர் என்று முன்னிலை முன்பாட்டிலிருந்து வருவிக்க; உளரேல் - உள்ளீரே யாகில்; தார் அகலம் சார - தாராக மார்பிற் பொருந்த; மிக அடர்தல் - ஊர்தலாாற் கொலை மிகவும் செய்தல்; சார்ந்திடுமேல் - சார்ந்திடுமாகில்; ஏன்? - அந்தோ என்ற அச்சக் குறிப்புப்பட நின்ற இடைச்சொல்; பாவம் - பழி என்ற பொருளில் வந்தறு. இறைவர் பாம்பு அணிதலை விலக்குதற்கு ஒரு காரணங் கற்பித்தவாறு; விலக்குதல் தாய் என்ற நிலையில் அம்மையாரது அன்பின் றிறம். |