நாவின் மாலையும் பூவின் மாலையும் அன்பினொடும் நம் ஈசனுக்குப் புனைந்து ஓர்கின்ற அறிவினுள் அறிவாகி நிற்கும் அவனைப்பற்றினால் எறியும் தீவினையாகிய இருள் எவ்வாறு வருத்தும்? (ஒருவாற்றாலும் வருத்தாது). நா மாலை - நாவினால் புனையும் பாமாலை; இதனால் வாக்கின் பணியும், பூமாலை - புனைந்து என்றதனால் கையின் (உடல்) பணியும், அன்பாய் - ஓர் - என்றதனால் மனத்தின் பணியும் என முக்கரணங்களும் ஒன்றுபட்ட வழிபாடு குறிக்கப்பட்டது. அறிவினையே - பேரறிவாகிய சிவம் "அறிவே யுன்னை யல்லா லறிந்தேத்த மாட்டேனே" (நம்பி - காளத்தி - 4); "அறிவி லறிவை யறியு மவர்கள், குறியுள் புகுதுங் குணவன்" (நெஞ்சுவிடுதூது), "அறிவுக் கறிவாகி" (கந்தர்கலி). ஓர் அறிவினையே - ஓர்கின்ற அறிவையே என்றலுமாம். எறிவினை - தன்னைப் பற்றியும் பிறவுயிரைப் பற்றியும் தெய்வத்தைப் பற்றியும் வரும் மூவகையான துன்பங்கள். 79, 85 முதலிய பாட்டுக்கள் பார்க்க. 87 இருளி னுருவென்கோ? மாமேக மென்கோ? மருளின் மணிநீல மென்கோ? - வருளெமக்கு நன்றுடையாய்! செஞ்சடைமே னக்கிலங்கு வெண்மதிய மொன்னுடையாய் கண்டத் தொளி. 88 நன்மைகள் எல்லாமுடைய இறைவரே! உமது கழுத்தில் உள்ள கருமை ஒளியை இருளின் உருவமென்று சொல்வேனா? மாமேகத்தின் நிறமென்பேனா? குற்றமற்ற நீலமாகிய மணிநிறமென்பேனா? (இன்னதென்று சொல்ல அறிகிலன்) தேவரீர் அருள்புரிவீராக! திருநீலகண்டத்தைப் போற்றியது; நிறத்தால் ஒற்றுமையாயினும் இருள் - ஒளிக்கு வேறுபாடாகிக் குணத்தால் மாறுபடுதலால் அதன் உருவத்தால் ஒப்புக் கூறவியலாதென்று, உருவும் பயனும் ஒத்திருத்தலின் மாமேக மென்கோ? என்றார்; இனி, அம்மேகந்தானும் பெய்யாத காலமுமுண்மையாலும், வெண்மேகமுமுண்மையாலும், அதனையும் கூறலாகாதென்று, எஞ்ஞான்றும் மாறாது ஒளியும் குற்றமின்மையும் அழகுடைமையும் கொண்டிருத்தலின் மருளின் மணி நீலமென்கோ? என்று பின்னர்க் கூறினார். அதுவும் ஒரு புடையே ஒப்பாமென்று என்கோ? என ஐயப்பட்டாற் கூறினர். மருள் - மணிக்குற்றம்; "அரன் கண்டத்தொளி விட்டோங்கு மிந்திர நீலம்" (திருவிளை - மாணிக் - 69); நக்கிலங்கு - நகுதல் உபசாரம். நகுதல் - விளங்குதல் எனக்கொளின் ஒரு பொருட்பன்மொழி. 88 ஒளிவிலி வன்மதனை யொண்பொடியர் நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய்! - ஒளிநஞ்ச முண்டவா யஃதிருப்ப வுன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்னிதனைக் கூறு. 89 ஒளி பொருந்திய வில்லையுடைய வலிய மன்மதனைச் சாம்பராகும்படி பார்வை செய்து, தெளிவுள்ளாரது சிந்தையில் சேர்பவரே! நிறமுடைய விடத்தை உண்ட உமது திருவாய் நிறம் மாறுபடாதிருப்பவும், கண்டம் இருணிறங் கொண்ட வகைதானென்? இதனைக் கூறுவீராக. ஒளியாவது தேவத்தன்மை. வில்லி - என்பது விலி என வந்தது. மரமறைவில் ஒளித்து நின்ற என்றலுமாம். வன்மை - சிவபெருமானை யொழித்தொழிந்த உயிர்வருக்கம் யாவையும் மயக்கம் செய்து நிற்கும் ஆண்மை; பொடியா நோக்கி சேர்வாய் - இறைவரது கோபப் பிரசாத வியல்பு குறித்தது. தளிவு - சிவனே |