26. | அறிவில்லாத மூடர்கள் மடிமையுள் வீழ்கின்றனர்; அறிஞன் கருத்துடைமையைத் தனது முதன்மையான அருந்தனமாகப் பாதுகாக்கிறான். | (6) |
| | |
27. | மடிமையுள் விழவேண்டாம். காமத்தோடு புலன்களின் இன்பங்களில் புகவேண்டாம். கருத்தோடு தியானம் செய்பவன் எல்லையற்ற இன்பத்தை அடைவான். | (7) |
| | |
28. | அறிவாளி, விடாமுயற்சியால் மடிமையை விரட்டிவிட்டு, ஞானமாகிய கோபுரத்தில் ஏறிச் சோகமற்ற நிலையில் இருந்து கொண்டு, கீழே சோகத்தில் ஆழ்ந்துள்ள மக்களைக் காண்கிறான். மலைமேலிருந்து கீழே சமவெளியைப் பார்ப்பதுபோல், அவன் மற்றையோரைப் பார்க்கிறான். | (8) |
| | |
29. | அறிவாளி, மடிமையில் ஆழ்ந்தவர் நடுவே முயற்சியுடையோனாகவும், உறங்குவோர் நடுவே விழிப்புள்ளவனாகவும் இருப்பான்; பந்தயக் குதிரை வாடகைக் குதிரையைப் பிந்தவிட்டு விட்டு முன்னேறிப் பாய்வது போல், அவன் மற்ற யாவர்க்கும் முன்னால் செல்கிறான். | (9) |
| | |
30. | மகவான்1 கருத்துடைமையால் தேவர்களின் அதிபதியாகி உயர்ந்தான். மக்கள் கருத்தில்லாமையைப் போற்றிப் புகழ்கின்றனர்; கருத்தில்லாமை எப்பொழுதும் இகழப்படுகிறது. | (10) |
| | |
31. | மடிமையைக் கண்டு அஞ்சி, கருத்துடைமையில் களிப்படையும் பிக்கு2, உள்ளத்தைப் பிணிக்கும் சிறிய, பெரிய தளைகளை யெல்லாம் அனலைப் போல் எரித்துக்கொண்டு செல்கிறான். | (11) |
| | |
32. | மடிமையைக் கண்டு அஞ்சிக் கருத்துடைமையில் களிப்படையும் கண்டு, அஞ்சிக் கருத்துடைமையில் நிருவாண மோட்சத்தின் அருகில் இருப்பவன். | (12) |