105. | வனத்தில் நூறு வருட வேள்வித் தீயைவணங்கி வந்தவன், தம்மைத் தாமே அடக்கிக் கொண்ட ஒருவரை ஒரு கணம் வணங்குதல் அந்த நூறு வருடப் பூசனையை விட மேலானது. | (6) |
| | |
106. | புண்ணியம் பெறுவதற்காக ஒருவன் ஒரு வருடத்தில் எத்தனை வேள்விகள் செய்தாலும், அவை அனைத்தும் உத்தம ஞானி ஒருவரை வணங்குவதில் நாலில் ஓரு பகுதிக்கு ஈடாகாது. | (7) |
| | |
107. | வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி மரியாதை செய்து வருவோனுக்கு ஆயுள், அழகு. இன்பம், வலிமை ஆகிய நான்கு பயன்களும், அதிகரிக்கும். | (8) |
| | |
108. | தீயொழுக்கத்துடன் அடக்கமில்லாமல் ஒருவன் நூறுவருடம் வாழ்வதைக்காட்டிலும், நல்லொழுக்கத்துடன் தியானம் செய்து வரும் ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது. | (9) |
| | |
109. | அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாழ்வதைக் காட்டிலும், ஞானத்தோடு தியானம் புரிந்துவரும் ஒருவன் ஒருநாள் வாழ்வதே மேலானது. | (10) |
| | |
110. | ஒருவன் சோம்பலுடன் பலவீனமாக நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், வீரியத்தோடு ஒருவன் முயற்சி செய்து ஒரு நாள் வாழ்வதே மேலானது. | (11) |
| | |
111. | (பிறப்பு, இறப்பாகிய) ஆரம்பத்தையும், முடிவையும் அறியாமல் ஒருவன் நூறு வருடம் வாழ்வதைக் காட்டிலும், அவற்றை அறிந்த ஒருவன் ஒரு நாள் வாழ்வதே மேலானது. | (12) |