கௌதம புத்தர் (கி மு. 573 - 493) புத்தர் பெருமானின் இயற்பெயர் சித்தார்த்தர்; குடும்பப் பெயர் கௌதமர். அவர் ஞானமடைந்த பிறகு ஏற்பட்ட பெயரே புத்தர். பிற்காலத்தில் அவர் தம்மைப்பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், ‘புத்தர்’ என்றோ, ‘ததாகதர்’ என்றோ கூறிக்கொள்வது வழக்கம். புத்தர் என்றால் பூர்ண ஞானம் பெற்றவர். ததாகதர் என்றால் முன்னோர் (முந்திய புத்தர்கள்) வழி யிலே செல்பவர் என்று பொருள். வட இந்தியாவில் கோசலநாட்டின் வட பகுதியில், கபிலவாஸ்து நகரில் 2,500 ஆண்டு கட்கு முன்பு அவதரித்த பெரியார் புத்தர். வீரமும் வலிமையும் மிகுந்த சாக்கிய குலத்தைச் சேர்ந்த மன்னர் சுத்தோதனநக்தப் குமாரர் அவர். எழில் மிகுந்த யசோதரை அவர் மனைவி. அவருக்கு இராகுலன் என்ற ஒரு குமாரனும் இருந்தான். அவர், தமது 29 ஆவது வயதில், |