296. | கௌதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும், பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனையெல்லாம் பௌத்த சங்கத்தைப் பற்றியவையே. | (9) |
| | |
297. | கௌதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள், இரவும், பகலும் அவர்களுடைய சிந்தனையெல்லாம் உடலின் தன்மையைப் பற்றியவையே. | (10) |
| | |
298. | கௌதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும், பகலும் எப்போதும் அவர்கள் மனம் அஹிம்சையைப் பற்றியே சிந்தித்திருக்கும். | (11) |
| | |
299. | கௌதமரின் சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும், பகலும் எப்போதும் அவர்கள் மனம் தியானத்திலேயே திளைத்திருக்கும். | (12) |
| | |
300. | உலக வாழ்வை விட்டுத் துறவியாதல் கஷ்டம்;அவ்வாழ்வை அநுபவிப்பதும் கஷ்டம்.இல்லறந் தானாக வீட்டிலிருந்து வாழ்வதும் கஷ்டம்.ஆதலால் எவனும் நாடோடியாகத் திரிய வேண்டாம்; எவனும் துன்பத்தில் விழவும் வேண்டாம். | (13) |
| | |
301. | சிரத்தையும், குணமும், புகழும், செல்வமும் பொருந்தியவன் எந்தெந்த இடத்தில் தங்கியிருந்தாலும் அங்கங்கே போற்றப்படுகிறான். | (14) |
| | |
302. | நல்லோர், இமய மலையைப் போல், நெடுந்தூரத்திலிருந்தே பிரகாசிக்கின்றனர்; ஆனால் தீயோர் இரவின் இருளூடு எய்த அம்புகளைப் போல் கண்ணுக்கே புலனாவதில்லை. | (15) |
| | |
303. | ஓருவன் தனியே அமர்ந்து, தனியே உறங்கி,தனியே வாழ்ந்து, மடிமையை ஒழித்துத் தானே தன்னை அடக்கி வைத்துக்கொண்டால், ஆசைகளற்ற நிலையில் அவன் இன்பம் பெறுவான். | (16) |