உண்மையான பிராமணன் ஓருவன் தன் தாயையும், தந்தையையும், குருமார்களாகிய க்ஷத்திரியமன்னர் இருவரையும், ஐந்தாவதாக ஓரு வேதியனையும் கொன்றிருந்த போதிலும், அவன் பாவமற்றவனாவான்.
(6)
294.
கௌதமருடைய1 சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும் பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனையெல்லாம் புத்தரைப் பற்றியவையே.
(7)
295.
கௌதமருடைய சீடர்கள் எப்போதும் கருத்துடன் விழிப்பாயிருக்கிறார்கள்; இரவும், பகலும் எப்போதும் அவர்களுடைய சிந்தனையெல்லாம் பௌத்த தருமத்தைப் பற்றியவையே.