332. | சிந்தனையில்லாமல் திரியும் மனிதனுக்கு அவா மாலுவக் கொடிபோல் வளர்கிறது. வனத்திலேவானரம் பழத்தை நாடி அங்குமிங்கும் தாவித் திரிவது போல், அவன் எடுக்கும் பிறவிகளுக்கு அளவில்லை. | (1) | | | | 333. | (இவ்வுலகில்) எவனை இந்தக் கொடிய விஷம் போன்ற அவா பற்றிக்கொள்கிறதோ, அவனுக்குச் சோகம் காட்டுப் புல்லைப்1 போல் வளர்ந்துபெருகிக் கொண்டேயிருக்கும். | (2) | | | | 334. | இவ்வுலகில் எவன் அடக்க அரிதான இந்தக்கொடிய அவாவை அடக்கி வெல்கிறானோ,அவனுடைய சோகங்கள், தாமரையிலையில் நீர்த்துளிகள் ஒட்டாமல் சிதறுவதுபோல், உதிர்ந்து ஒழிகின்றன. | (3) | | | | 335. | இங்கே கூடியுள்ள உங்கள் அனைவருக்கும் நன்மையான இந்த உபதேசத்தைச் செய்கிறேன்.வீரணப்புல்லின் கிழங்குக்காக2 அப்புல்லையே | |
1 | காட்டுப்புல்-பீரணம் அல்லது வீரணம் என்ற ஒருவகைப் புல் இங்கே கூறப்படுகிறது. | 2 | இக்கிழங்கு 'உஸீரம்' என்று குறிக்கப்பெற்றிருக்கிறது; இது, வாசமுள்ளது. |
|
|
|