327. | அறிவாளியாயும், உன்னோடு ஒத்துப் பழகக்கூடியவனாயும், அடக்கத்தோடு நல்லொழுக்க முடையவனாயும் ஒரு தோழன் கிடைக்கவில்லை யானால், தன்னை வென்ற பகையரசனிடம்நாட்டைவிட்டு வெளியேறும் மன்னனைப் போலவும், யானைகளின் வனத்திலே யானை (சுயேச்சை யாய்த்) திரிவது போலவும், நீ தனியாகவேவாழ்வாயாக. | (10) |